ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம்.

ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம்

  ஒன்பதாம் பாவ காரகங்கள், ஒன்பதாம் பாவத்தில் பலன்கள் என்று பார்க்கும்போது, ஒரு மனித வாழ்வில், மனித உடலில் இடுப்பு பகுதி, மலைப் பகுதிகள். உடலின் பின்புற பகுதிகளைக் குறிக்கும். ஏற்கனவே நான் சொன்ன மாதிரி இது லக்னத்திற்கு திரிகோண 3 ஆம் பாவமாக இருப்பதால், லக்னத்தை வலுப்பெறச் செய்யும். ஒரு மனிதனின் நேர்மை, நம்பிக்கை, விசுவாசம், தெய்வ நம்பிக்கை, மனதில் ஏற்படும் மனிதாபிமான குணங்கள். ஆராய்ச்சி சார்ந்த படிப்பு. உண்மை நிலை. உபாசன நிலை. கடவுள் நம்பிக்கை, தான அதர்ம எண்ணங்கள், தியாக சிந்தனை, உயர்கல்வி , ஒருவரை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுதல் , கோயில் திருப்பணிகள், ஜாதகருக்கு வரும் அதிர்ஷ்டம், முந்தைய பிறவியில் செய்த அதிர்ஷ்டம், முந்திய பிறவியில் செய்த எதிர்மறைச் செயல்கள்,கோயில் பணம், கோயில் வருமானம், கோயிலில் கமிஷன், லஞ்சம், உண்டியல் திருட்டு, கோயில் டிக்கெட் எடுகாது குறுக்குவழிகள்,9ஆம் பாவத்தின் காரகங்களாகும். தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடத்தல், முன்ஜென்ம வினையால் பிறக்கும்போதே செல்வந்தர் மகனாக பிறத்தல், முன் செய்த வினையால் ஏழைக்கு மகனாக பிறத்தல். கலைகள், அரசியல், ஆன்மீகம், அறக்கட்டளைகள், மிகப்பெரிய செல்வந்தர் குடும்பம், மற்றவரின் செல்வத்தை தானமாக பெறுதல், லாட்டரி,குரளிவித்தை, பங்குச்சந்தை போன்ற விஷயங்கள் ஒன்பதாம் பாவ காரகங்கள் ஆகும்.

இந்த பாவத்தைத் தான் பாக்கிய ஸ்தானம் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் நாம் குறிப்பிடுகின்றோம். ஆழ்ந்த உறக்கம், தியானம், ஒரு மகானிடம் இருந்து உபதேசம் பெறுதல், ஆன்மீகவாதிகள், மரபுவழிச் சிந்தனை, திருப்பணிகள், பொருளாதாரச் சிந்தனை, பெருந்தன்மை, முன்யோசனை,  நீண்ட தூர பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்கள், அன்னிய நபர்கள், உயர்கல்வி, பல்கலைக்கழகம், இயற்கை சார்ந்த விஷயங்கள், தெய்வ அனுகிரகம் , ஆலயங்கள், சர்ச் , மசூதி போன்ற வேற்று மத இடங்கள். குரு நிலையில் இருப்பவர்கள். வெளிநாட்டு செய்திகள். நீண்டதூர செய்திகள். வானொலி. தொலைக்காட்சி. கம்பியில்லாத் தந்தி ஆபீஸ்.கள்ளத் தொடர்பு, ஆவியுலகத் தொடர்பு, உலக அனுபவம், சட்டம் ஒழுங்கு , நீதி நெறி, நடுவராக இருப்பது, நீதிபதிகள், ஏற்றுமதி-இறக்குமதி, சர்வதேச வர்த்தகம், பரம்பரைச் சொத்து, பணம், முடக்கம், தொழில் நஷ்டம், முற்பிறவியில் செய்த பாவம், முற்பிறவியில் செய்த புண்ணியங்கள், நன்மைகள், தீமைகள் ஆக இவைகள் எல்லாமே ஒன்பதாம் பாவ காரகங்கள் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது, மேற்கூறிய காரகங்கள் மூலமாக, ஏதாவது ஒரு காரியங்கள் மூலமாக அவருக்கு பணங்கள் வரும். 9ஆம் பாவம் 1 3 7 11 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது மேற்கூறிய பாவங்கள் வழியாக சந்தோசம், பணம் சார்ந்த ஒரு நிலை  நடுத்தர அமைப்பில் வரும். இதே ஒன்பதாம் பாவம் ,8, 12 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது, மிகவும் மேற்கூறிய பாவங்கள் வழியாக எதிர்மறையான பலன்களை கொடுக்கும். இதே ஒன்பதாம் பாவம் 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது. தந்தை வழி மற்றும் தனது வாழ்வில் சன்யாசம் போன்ற வாழ்க்கை அமையும்.