ஜோதிடத்தில் ஐந்தாம் பாவம்

ஜோதிடத்தில் ஐந்தாம் பாவம்

ஐந்தாம் பாவம் என்று பார்க்கும்பொழுது, மனித உடலில் வாழ்க்கையை வாழ இருதயம் , முதுகுத்தண்டு, பாலியல் ஹார்மோன்கள், உயிர் உற்பத்திக்கான உயிரணு, அதேபோல ஒன்றாம் பாவத்திற்கு திரிகோண பாவம், ஒரு ஜாதகரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வைக்கும் வேலையை ஐந்தாம் பாவம் செய்யும். அதாவது லக்கின பாவத்தை இயக்கக்கூடிய பாவம் ஐந்தாம் பாவம். ஆகவே ஜாதகரின் சுய முயற்சியை மேம்படுத்தும் பாவம் ஐந்தாம் பாவம். ஒரு உயிரை உருவாக்கும் சக்தி, குழந்தைகள், வாரிசுகளை தத்தெடுத்தல், பொழுதுபோக்கு விஷயங்கள்,தன்னை அழகுபடுத்திக் கொள்ளுதல், ரசனை, உல்லாசம், விளையாட்டு, கலைகளில் ஆர்வம், உடலை சிறிது கூட வருத்தாமல் இருப்பது,சேர்மார்கெட், சிற்றின்பத்தில் அதிக நாட்டம், எதையும் மறைக்காமல் பெறுதல், கமிஷன் வியாபாரம், கவர்ச்சிக்கு மயங்குதல் , காதல் வயப்படுதல், இன்ப உணர்வுகளை அதிகம் நுகருதல், எதையும் உணர்வுபூர்வமாக பார்த்தல், கற்பனை கலந்த உணர்வு, இவையாவும் 5 ஆம் பாவத்தின் காரகங்களாகும்.

விருந்தோம்பல், பாச உணர்வு, தனது செயல் மூலம் மகிழ்ச்சி செய்தல்,  கேளிக்கைகள், சூதாட்டம் , சினிமா, நாடகம், இசை கச்சேரி, மந்திரம் ஜபித்தல், காம களியாட்டங்கள் இலக்கிய படைப்பு , புண்ணியம் அல்லது பாவம், அன்னதானம், மருந்து தானம், உடல் தானம், போன்றவைகள் ஐந்தாம் பாவ காரகங்கள் ஆகும். ஐந்தாம் பாவம் என்பது எக்காரணம் கொண்டும் 8, 1ம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது, அப்படி தொடர்பு கொள்கிறது என்று சொன்னால் குழந்தைகள் வழியாக அவர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாழ்க்கை என்பது கிடைக்காது, அதேசமயம் இருதயம் சார்ந்த, மார்பகம் சார்ந்த பகுதிகளில் உடல் ரீதியாக பிரச்சினைகளைக் கொடுக்கும் ,அதே 5ஆம் பாவம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டால் கம்ப்யூட்டர் சார்ந்த ஒரு கணினி சார்ந்த தொழில் தன்னையும் தன்னுடைய சுய முயற்சியில் பெரிய அளவில் முன்னேற்றத்தை பெறுவார்கள். இந்த வேலையை இவர் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிலைக்கு ஒரு மனிதனை மாற்றி வைக்கும் ஐந்தாம் பாவம். அதே ஐந்தாம் பாவம் 1, 3 ,7, 11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது  சாதாரண மற்றும் நடுத்தர வாழ்க்கையும், கமிஷன் சார்ந்த வியாபாரம் செய்வதும் , சொந்தத் தொழிலாக இல்லாது , நடந்து கொண்டும், ஓடிக் கொண்டும் வாகனங்களில் சென்று கொண்டும் வருமானம் ஈட்டும் தொழில் செய்வதும் நடக்கும். அதே ஐந்தாம் பாவம் 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது, சும்மா இருக்கிற ஒருவரை,வாகனத்தை எடுத்து வந்த அவரை ஏற்றிக் கொண்டு செல்வதும், அவருக்கு ஒரு மதிய உணவு வாங்கி கொடுத்த பிறகு, மாலை நேரத்தில் இல்லத்தில் கொண்டு இறக்கி விட்டது போன்ற நிலையை செய்யும் நபராக இருப்பார்கள்.அதாவது வெளியே சுற்றி வருவார்கள். அது பைசா பிரயோசனம் இருக்காது.