ஜோதிடத்தில் ஏழாம் பாவம்

ஜோதிடத்தில் ஏழாம் பாவம்

ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்று நாம் பார்த்தால் ஏழாம் பாவம் தான் ஒரு மனிதனை மிகப்பெரிய அளவில் முன்னேற்றமான ஒரு தொழிலதிபர் என்று சொல்லக் கூடிய நிலைக்கு கொடுக்கின்ற ஒரு பாவம். எல்லோருமே தொழில் செய்ய முடியுமா?. என்று கேட்டால் என்னைப் பொறுத்த அளவில், ஏழாம் பாவம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொள்ளும்  மனிதர்கள் மட்டுமே தொழில் அதிபர்களாக மாறமுடியும். இல்லை என்றால் மிகவும் கடினம்.  ஏழாம் பாவம் 1,3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும்போது ஒரு சாதாரண வேலை செய்யக்கூடிய அல்லது எந்த தொழிலாக இருந்தாலும்  நார்மலாக வியாபாரம் நடத்த கூடிய  மனிதர்களாகத் தான் இருப்பார்கள். ஏழாம் பாவம் 8,12 பாவங்களை தொடர்பு கொள்ளும்போது, மனைவி சார்ந்த வகையிலும், சுற்றத்தார்  வகையிலும், தொழில் பார்ட்னர்கள் சார்ந்த வகையிலும் எதிரிடை பலன்களைக் கொடுக்கும்.இவர்கள் தொழில் செய்தால் இவர்களுடைய பணம் வேறு ஒரு இடத்தில் நின்று லாக் ஆகி நின்று விடும். பிறகு மீண்டும் தொழிலை தொடங்குவது என்பது மிகவும் கடினம். இது ஒருவருக்கு ஏழாம் பாவம் உடல் ரீதியாக, அடி வயிறு, தொப்புள் சார்ந்த, சிறுநீரகம் சார்ந்த, கர்ப்பப்பை சார்ந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும்.  இந்த பாவம் கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் மாற்றி இருக்கக்கூடிய பாவமாக இருக்கும். அதே போல கணவன் மனைவி உறவினை கடந்து, மற்ற அண்ணன்-தம்பி அக்கா-தங்கை அதேபோல, தொழில் கூட்டாளிகள், நீண்டகால உறவுகள், ஏழாம் பாவம் காரகமாக எடுத்துக்கொள்ளும். அதேபோல ஒருவருக்கு வரும் வாடிக்கையாளரும் ஏழாம் பாவம் தான். ஜாதகருக்கு பொதுமக்கள் தொடர்பும் ஏழாம் பாவம் தான். ஒரு மனிதனுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரமும் ஏழாம் பாவம் தான். ஒரு மனிதன் எல்லோரிடமும் பழகுதல் என்று சொல்வதும் அல்லது, பணத்திற்காக தொடர்பில் இருக்கின்றார்களா? என்பதையும் ஏழாம் பாவம் தான் முடிவு செய்யும். இந்த இடத்தில் ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய அளவில் பணம் சார்ந்த நிகழ்வுகளிலும், உடல் சார்ந்த நிகழ்வுகளிலும், உறவு சார்ந்த நிகழ்வுகளிலும் பாதிப்பு வருகிறது என்று சொன்னால் ஏழாம் பாவத்தை இயக்கித்தான் எதிரிடை காரகங்களில் வெற்றி பேற வேண்டும். ஜோதிட ஆலோசனை ……