ஜோதிடத்தில் எட்டாம் பாவம்

ஜோதிடத்தில் எட்டாம் பாவம் என்று பார்க்கும்பொழுது மனித உடலின் பல உறுப்புகள் சார்ந்த துணி கொண்டு 24 மணி நேரமும் மறைக்கப்பட்ட இடங்களைக் குறிக்கும் பாவம். மனித ஆயுளை குறிக்கும் பாவம். மரணத்தைக் குறிக்கும் பாவம். ஒரு மனித வாழ்வில் தீமைகள், வேதனை, வழிகள், துரோகங்கள், துக்கங்கள், துரதிர்ஷ்டங்கள், போராட்டங்கள், விபத்துக்கள், உடல் உறுப்புக்கள் பழுதடைவது, ஒருவரின் பொருள் திருட்டுப் போகுதல், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கை, குறுக்குவழிகள், எதிர்மறை சம்பவங்கள், கடவுள் அருள் கிடைக்காமல் இருப்பது, கடவுளை நம்பாமல் இருப்பது, ஆராய்ச்சி இல்லாமல் இருப்பது, நேர்மையாக இல்லாமல் இருப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, தான தர்மம் செய்யாமல் இருப்பது, எதுவும் எளிதாகக் கிடைக் காமல் இருப்பது இவையாவும் எட்டாம் பாவங்கள் காரகம் ஆகும்.

தெய்வத்தின் அனுகிரகம் இல்லாமல் இருப்பது, தான் நினைத்தது போல் ஒரு வேலையை செய்ய முடியாமல் இருப்பது, பலவிதமான தடைகள், தடங்கள் வருவது, ஒருவரின் சிந்தனை,தவறான வழி செல்வது, ஒருவருக்கு வரும் அவமானம்,முயற்சி வீணாகுதல், ஒருவரின் திறமை குன்றிலிட்ட விளக்காக இருப்பது இல்லாத குடத்திலிட்ட விளக்காக இருப்பது, வெளி உலகத்திற்கு ஒட்டாது இருத்தல்,  தற்கொலை எண்ணங்கள், தற்கொலை நடப்பது , கொலைகள் நடப்பது, துர்மரணங்கள் நடப்பது, உடல் உறுப்புக்கள் சேதமடைதல், கொள்ளைகள் போவது, எதிரிகள் தொல்லை, எல்லாவித தடைகள், வீண் பழி,செய்யாத தவறுக்கு தண்டனை, நஷ்டமடைந்து இன்சூரன்ஸ் பணம் வராமல் போவது, திருட்டு பணம்,ஏமாற்றி பணம் வருதல்,  இன்சூரன்ஸ் தொகை கட்டுவது, உயிர்காக்க போராடுவது, வாரிசு பிரச்சனைகள், உறவினர்கள் பிரச்சனை, லஞ்ச பிரச்சனைகள்,  இறந்தவரின் பணம் கிடைத்தல், அறுவைச் சிகிச்சைகள், சக்திக்கு மீறி கடன், கடன் காரணமாக தன்னை தன்னை தாழ்த்தி கொள்ளல், கடனுக்கு தனது உடல் உயிர் உடமை உரிமை பொருள் விட்டு கொடுத்து வாழ்தல், கடனுக்கு ஒருவரிடம் அடிமை ஆகுதல், கடனுக்கு குடும்ப உறவுகளை விட்டு கொடுத்து வாழ்க்கை நடத்தும் நிலை, கடுமையாக உழைப்பது, மூட்டை தூக்குதல், பிச்சை எடுத்தல் , மறைந்து வாழ்வது, நாட்பட்ட நோய்கள், வலி வேதனைகள், சட்டவிரோத பொருள்கள், லஞ்சப் பணம், கொள்ளை அடிப்பது, ஏமாற்றி பணம் சம்பாதிப்பது, இளமையில் தந்தை இறப்பது, இயற்கைச் சீற்றங்கள், போரில் அழிந்து போதல், போரில் இறந்து விடுவது, கனவிலும் நடக்காத தீமைகள், தெய்வ நிந்தனை, இவைகள் யாவும் எட்டாம் பாவ காரகங்கள் ஆகும்.

ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் பாவம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது பெரிய அளவில் தவறான பணங்கள் அவரிடம் குவிந்துவிடும். கோடிக்கணக்கில் என்று சொல்லலாம். அதே எட்டாம் பாவம் 5,9 தொடர்பு கொள்வது மிக மிக நன்று .அதே எட்டாம் பாவம் 1, 3 ,7, 11 பாவங்களை தொடர்பு மிக மிக மென்மையானது நல்லது. அதே எட்டாம் பாவம் 8 ,12 மிகப்பெரிய அளவில் பாதிப்புகளையும், சங்கங்களையும்,தர்ம சங்கடங்களையும், எதிர்மறை விஷயங்கள் என்னென்ன இருக்கிறதோ அதில் ஏதாவது ஒன்று அவருக்கு வாழ்க்கையில் நடந்து விடும். இது எந்த காலகட்டங்களில் நடக்கும் என்று சொன்னால், அதன் தசா புத்திகள் நடக்கும் கால கட்டங்களில் கண்டிப்பாக நடக்கும். ஜாதகத்தில் 8ம் இடம்,எட்டாம் வீட்டு அதிபதி, ஜாதகத்தில் 6ஆம் இடம்,எட்டில் சனி இருந்தால்,