ஜோதிடத்தில் ஆறாம் பாவம்

ஜோதிடத்தில் ஆறாம் பாவம்

ஜாதகத்தில் ஆறாம் பாவம் காரகங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். ஆறாம் பாவம் என்று சொன்னாலே மனித உடலில் இருக்கக் கூடிய வயிறு, இரைப்பை, கல்லீரல் போன்றவற்றை குறிக்கும். ஆறாம் பாவம் மனித உடலில் வரும் அனைத்து நோய் மற்றும், நோய் கிருமிகளையும் குறிக்கும். ஆறாம் பாவம் என்பது உழைப்பு சார்ந்த விஷயத்திற்கு காரணமாகும். வேலையாட்கள் சார்ந்த காரணமாகும். அதாவது ஒரு மனிதனுக்கு அந்தஸ்துக்கு இணையில்லாத வேலைக்காரர்கள், அடிமைகள், செல்லமாக வளர்க்கும் உயிரினங்கள், வீட்டு விலங்குகள், ஜாதகருக்கு கட்டுப்படும் மக்கள், கால்நடை உயிரினங்கள், ஒருவர் வெற்றி கொள்ளும் மனிதர், பரிசு, சுகம் இல்லாது இருக்கும் மனிதர், திருமணம் முறிந்து போகும் மனிதர், திருமண பந்தம் அமையாமல் இருக்கும் மனிதர், வாழ்க்கைத் துணை மீது அதிகம் ஆதிக்கம் செலுத்தும் அடிமைப்படுத்த நினைக்கும் மனிதர். பொதுமக்கள் தொடர்பில் இருந்து விலகி தனித்து இருக்கும் மனிதர்கள், மற்றவரை தோல்வியடைச் செய்து வெற்றி பெறும் மனிதர், ஜாதகருக்கு மறைமுக எதிரிகள்,  வம்பு வழக்கு  ஆறுநபர்கள் இருந்து  ஒருவர் மட்டும் தனித்து இருத்தல். தனித்த சிந்தனைகள், உலகிற்கு தவறாக தெரிந்தாலும் திரும்பத் திரும்ப செய்தல், தன்னிடம் இருக்கும் நபர்களை உதாசீனப்படுத்துதல், சமூகக் கட்டுப்பாடுகளை மீறுதல், மற்றவர்களிடம் பணிபுரிதல், மாத சம்பளம், வேலையாட்கள், நோய் நொடிகள், எதிரிகள் உருவாவது ,  கஞ்சத்தனமாக இருப்பது, ஆணவத்தோடு இருப்பவர்கள், பெயர் புகழ் கெடுதல்,  மற்றவர் பொருளை அபகரித்தல், தற்பெருமை பேசிக்கொள்வது , தற்காலிக பணவரவு, திருப்தி தரும் பணம், கடன்,ருணம்,ரோகம் , சிறைச்சாலை தனிமை வாழ்க்கை, இவையாவும் ஆறாம் பாவ காரகங்களே. தாயின் இளைய சகோதரி, அல்லது மாமா, தேவைக்கதிகமான நிலம், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணை, கூலிக்கு வேலை செய்யக்கூடிய தொழில் கூடங்கள்,தொழில் பொருள் இல்லாமல் முதலீடு இல்லாத கூலிக்கு வேலை செய்யும் தொழில்கள், வாடகை வருமானம், இவை யாவும் ஆறாம் பாவ காரகங்கள் ஆகும்.

ஒரு மனிதனுக்கு ஆறாம் பாவம் என்பது நீண்டநாள் அடிமை வேலை செய்வது அல்லது, ஒரே இடத்தில் 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்வது.இந்த பலன்கள் எப்போது நடக்கும் என்று சொன்னால் 2,4,6,10 பாவங்களை ஆறாம் பாவம் தொடர்பு கொள்ளும்பொழுது நடக்கும். வேலை வாய்ப்பு தொழில் மூலமாக ஒருவர் வெற்றி , இதே ஆறாம் பாகம் 1 ,3 7, 11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது, ஒரு பெரிய வருமானம் கொடுக்காது, வேலையைச் செய்யக் கூடிய மனிதராக இருப்பார். அதே ஆறாம் பாவம்  நோய் சார்ந்த வகையிலும், வேறு  வகையிலும் பாதிப்புகள் இருக்கும். அதே ஒருவருக்கு 5,9 பாவங்களை தொடர்பு கொண்டால் ஆறாம் பாவம் அடிக்கடி வேலையில் மாற்றம் அடையக் கூடிய மனிதராகவும், ஜாலியாக வாழ்க்கையை போக்க, சொத்துக்களை விற்றும் , கடன் வாங்கி செலவு செய்து வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதனாக வாழக் கூடிய நிகழ்வை ஒரு மனிதனுக்குக் கொடுக்கும்.