ஜாதகத்தில் மூன்றாவது பாவம்

ஜாதகத்தில் மூன்றாவது பாவம்

ஜோதிடத்தில் மூன்றாம் பாவம்  மனித உடல் கூறில் மூன்றாம் பாவம் என்பது காது, தோள்பட்டை, கைகள், கழுத்து எலும்பு, கழுத்திற்கு கீழாகச் செல்லும் உடலில் இருக்கக்கூடிய நரம்பு மண்டலம், ரத்தம் செல்லும் ரத்த நாளம், மூளைக்கு உணர்வு பதிவுகளை கொண்டுசெல்லும் புலன் சார்ந்த பதிவு, ஆகியவற்றை குறிக்கும் பாவம். ஏற்கனவே சொன்ன மாதிரி மூன்றாம் பாவம் என்பது எழுத்தைக் குறிக்கும். எல்லா விதமான தகவல் தொடர்பு , தகவல் பரிமாற்றங்களும், ஒப்பந்தங்களும் 3 ம் பாவகாரகங்கள். உடலுறுப்பில் காது, தகவல் தொடர்பு , மனித உடலில் தோள்பட்டை, கைகள், ஒருவரது பராக்கிரமத்தை நிர்ணயிப்பது , தைரியம், தன்னம்பிக்கை, மனோபலம், மனதில் உறுதிப்பாடு, செயல்களில் விடாமுயற்சி, போன்றவை மூன்றாம் பாவத்தில் காரணம் ஆகும். மூன்றாம் பாவம் இடமாற்றங்களையும், சிறு பயணங்களையும், பக்கத்து வீடு, பக்கத்து ஊர், அண்டை மாநிலம், அண்டை நாடுகள் போன்றவற்றையும், சொத்துக்களை இழத்தல், ஒரு இடத்தை விற்பனை செய்தல், ஒரு பொருளுக்கு ஒரு பொருளை வாங்குதல், போன்ற விஷயங்களை மூன்றாம் பாவம் காரகங்களாக எடுத்துக்கொள்ளவேண்டும். உறவுமுறைகளில் இளைய சகோதர சகோதரி, மாமனார், தந்தையின் சகோதர சகோதரிகள், அத்தை, சித்தப்பாமார்கள், மூன்றாம் பாவ காரகங்கள் ஆகும். ஆரம்பக்கல்வி மூன்றாம் பாவகம்,    கடிதம், தபால் நிலையம், தொலைபேசி, கைபேசி, தொலைக்காட்சி, ரேடியோ, செய்திகள், எதையும் சிறியதாக மாற்றிக் கொடுப்பது, சிடி, டிவிடி, பென் டிரைவ், அடையாளச் சின்னங்கள், சான்றிதழ்கள், மெமரி கார்டு, காசோலைகள், உலகில் உள்ள அனைத்து பதிவு சார்ந்த விஷயங்கள், மத்தியஸ்தம் செய்தல், தூது செல்லுதல், பத்திரிக்கைத்துறை, தொலைக்காட்சித் துறை, விளம்பரத்துறை, ஊடகத்துறை , கையெழுத்து பிரதிகள், நூலகம், அச்சுக் கூடங்கள், குத்தகை இடங்கள், தந்திசெய்திகள், கோள் மூட்டுதல், கோள் சொல்லுதல், புறம் பேசுதல், மனம் புத்தி பேதலித்தல், மன நோய்கள், இவை யாவும் மூன்றாம் பாவ காரகங்கள். அதேபோல எட்டாம் பாவம் மிகப்பெரிய எதிரி என்றால், அந்த எட்டாம் பாவத்தை அடக்கக்கூடிய எதிரி யாரென்று சொன்னால் 3 ஆம் பாவமே.

  கம்ப்யூட்டர் என்பது மூன்றாம் பாவம்.  தகவல் தொடர்பு துறை,   வெளியூரில், பக்கத்து ஊர்களில், பக்கத்து நாடுகளில் வேலை செய்யக்கூடிய மனிதர்களுக்கு மூன்றாம் பாவம் நன்றாக இருந்தால் தான் வேலை செய்ய முடியும். ஒரு கம்ப்யூட்டர் சார்ந்த துறையில், சாப்ட்வேர் ஹார்ட்வேர் துறையில் இருக்கக் கூடிய மனிதர்கள் மூன்றாம் பாவம் நன்றாக இருந்தால் தான் வேலை செய்ய முடியும். அதே போல ஒரு மனிதனுக்கு மூன்றாம் பாவம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டால், மிகப்பெரிய அளவில் இதன் காரகங்கள் வழியாக பணம் வரும். அதே சமயம் மூன்றாம் பாகம் 1 ,3, 7, 11 பாவங்களை தொடர்பு கொண்டால், ஒரு நடுத்தர வாழ்க்கையாக வாழ்க்கை அமையும். அதே மூன்றாம் பாகம் 8, 12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது, மனம் சார்ந்த குழப்பங்கள் தகவல் தொடர்பில், டாக்குமெண்ட் பத்திரங்கள், சார்ந்த விஷயங்களில் அவர் நெருக்கடியை சந்திப்பார்கள். மூன்றாம் பாவம் 5,9 பாவங்களோடு தொடர்பு கொள்ளும்போது, சும்மா சுற்றக்கூடிய,சும்மா  இருக்கக் கூடிய, வீண் வதந்திகளை பேசக்கூடிய, புறம் பேசக்கூடிய எதிலும் பற்று இல்லாத மனிதர்களாக வாழ்வார்கள்.