செவ்வாய் கிரக காரகங்கள்

ஒரு ஜாதகத்தில்ம் என்பது, தைரிய, வீர, விஜய, வெற்றியை கொடுக்கக் கூடிய கிரகமாக இருக்கிறது. இது சூரியனிலிருந்து நாலாவது நீள்வட்டப்பாதையில் இருக்கிறது. செவ்வாயில் பூமியை போலவே தட்பவெப்ப நிலைகள் இருப்பதால், உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என நமது அறிவியல் கூறுகிறது. அதனால்தான் ஜோதிடத்தில் பூமிகாரகன் என்று செவ்வாயை நமது முன்னோர்கள் குறிப்பிட்டார்கள். செவ்வாயின் காரகமாக காலி இடங்கள், நிலையாக இருக்கக் கூடிய சொத்துக்கள், செவ்வாய் போன்று ஒழுங்காக இல்லாத பாறை, மலை சார்ந்த இடங்கள், கரடுமுரடான ஆயுதங்கள், கூர்மையான பொருள்கள் செவ்வாய் காரகம் வகிக்கிறார். மனித வாழ்க்கையில் நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆசையை கொடுப்பவர் செவ்வாய் ஆவார். ஒருவரின் நிலத்தை ஆக்கிரமிப்பு அல்லது, ஒருவரின் நிலத்தை அபகரிப்பு செய்ய அதன் காரணமாக போர் நடப்பதற்கு காரணமாக செவ்வாய் காரகம் வைக்கின்றார். ஆகவே சண்டை சச்சரவுக்கு காரகமாக செவ்வாய் இருக்கின்றார். சண்டையில் பயன்படுத்தும் கூர்மையான ஆயுதங்களுக்கு, துப்பாக்கி போன்ற பொருள்களுக்கு செவ்வாய் காரகம் வைக்கின்றார். சண்டை மூலம் வரும் காயங்கள், வலி, வேதனை அடக்குமுறை, விபத்து, போன்றவற்றிற்கு செவ்வாய் காரகமாக இருக்கின்றார். சட்டம் ஒழுங்கு, சார்ந்த சமூக விரோத தீவிரவாத செயல்களுக்கும் செவ்வாய் காரகமாக இருக்கின்றார். காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறை, சீருடை அணிந்த உடல் வலிமையோடு செயல்படும் தொழில் அமைப்பு சார்ந்த மக்களுக்கு செவ்வாய் காரகம் வைக்கின்றார். உறவுகளில், சொத்துக்களில் வாரிசு காரணமாக சண்டை நடப்பதற்கும் செவ்வாய் காரகமாக வகிக்கின்றார். சகோதர சகோதரிகளுக்கு செவ்வாய் காரகம் வகிக்கிறார். திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்க்கு முதலிடம் உண்டு. அது பெண்களுக்கு மட்டும் காரகமாக எடுத்துக் கொள்கின்றார்.

தைரியம், முன்கோபம், முரட்டுத்தனம், பிடிவாதம் மற்றவருக்கு கட்டுப்படாது இருத்தல், புரட்சி செய்தல், உடல் வலிமையை பறைசாற்றும்நடவடிக்கை, மற்றவர்கள் படும் துன்பத்தை ரசித்தல், ரத்தம் சம்பந்தப்பட்ட வேலைகள், உடல் தசை சம்பந்தப்பட்ட வேலைகள், கட்டுமஸ்தான உடல் இவற்றிற்கு செவ்வாய் காரகமாக இருக்கின்றார். கராத்தே, குத்துச்சண்டை, மஞ்சுவிரட்டு, மாடு பிடி வீர விளையாட்டுகளுக்கு செவ்வாய் கிரகம் காரகன். அறுவை சிகிச்சை, கடுமையான நோய், கோர விபத்து, கொடூரமான மரணம், கொலைகள் போன்ற எதிர்மறை செயல்களுக்கு செவ்வாய் காரகம் வகிக்கிறார். அமைதி இல்லாமல் இருப்பது, எப்பொழுதும் பதற்றமாக இருப்பது, கடன், வம்பு வழக்கு, சண்டை சச்சரவு , துரோகம். மற்றவர்களால் கட்டுப்படுதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், தீவிரவாதம், ஊழல் போன்றவற்றுக்கு செவ்வாய் கிரகம் காரகன். பெரிய இயந்திரங்கள், பெரிய தொழிற்சாலைகள், கருவிகள், கட்டுமானத் தொழிற்சாலைகள், கட்டுமான தொழில்கள், கனரக வாகனங்கள், ஆபத்தான கொடிய விலங்குகள், முட்செடிகள் , கரடுமுரடான பாதை, செம்பு , உணவுப் பொருட்களில் மிளகாய், தெய்வங்களில் முருகன் காரகன். செவ்வாயை கிரகங்களில் அசுபராக சொன்னாலும், ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகம் 2,4,6 பத்து பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றியும், 1, 3, 7 ,11 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது நடுத்தர வாழ்க்கையும், நல்ல ஒரு நிலையும், கடன் இல்லாத வாழ்க்கையும், மன சந்தோஷமான வாழ்க்கையும், திசா புக்தி காலங்களில் கொடுப்பார்.அதேபோல 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது கடன் கேட்டால் கடன் கிடைக்கும். வேலையில்லாத நிலையாக இருக்கும். அதே செவ்வாய் 8, 12 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது போலீஸ் யாரைக் கண்டு பயப்படுவார் என்றால், திருடன் என்று தான் அந்த நிலைக்கு ஒரு மனிதனை தள்ளி விடுவார்.

அத்தை,அண்ணி,மூத்தசகோதரி sevvai kiragam- How to Learn about Mars