வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய முறை

வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய முறைகள்

தினமும் குளிக்கும்போது கொஞ்சம் கங்கை நீரை குறைந்த பட்சமாக ஐந்து மிலி அளவாக கலந்து குளித்தால் தீயசக்தி நம்மிடம் அண்டாது. ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது, ஆகவே வீட்டில் சுற்றிலும் தண்ணீர் அமைப்பாக பைப் லைன் அமைப்பு நல்லது.
நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்டாது.
இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும்,
வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி ஓடிவிடும்.
வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி தாக்குதல் நடத்தாது.
வலதுகை மணிகட்டில் ஒரு கயிரினை இருக்க மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும்.பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும்,தீய சக்திகளை விரட்ட முடியும்.

வேப்ப மர இலையை கையில் வைத்திருந்தாலும்,மயில் தோகையை கையில் வைத்திருந்தாலும்,எதாவது ஒரு உலோக பொருள் கையில் வைத்திருந்தாலும்ம தீயசக்தி அணுகாது.
எலுமிச்சை கையில் வைத்திருந்தாலும்,உப்பு சார்ந்த கடல் தண்ணீரில் நின்றாலும், மஞ்சள் கலந்த தண்ணீரில் நின்றாலும் தீயசக்தி விலகிவிடும், அண்டாது.
துளசி செடி இருக்கும் அருகில் தீயசக்தி அறவே வராது.

வேப்பெண்ணெய் மற்றும் இலுப்பை, மற்றும் நல்லெண்ணெய், நெய்,புங்கஎண்ணெய் சேர்த்து எரியவிடும் தீபத்தின் அருகில் தீயசக்தி விலகிவிடும்.
நாய் உடன் இருந்தாலும் தீயசக்தி அண்டாது.
பசுவின் கோமூத்ரம் பட்ட இடத்திலும் தீயசக்தி அண்டாது, பசுவின் பால்மற்றும் சாணம் வழித்து விட்ட இடத்திலும் தீயசக்தி விலகிவிடும், .பௌர்ணமி இரவு முழுக்க தூங்காமல் இருந்து அரசமரத்தை வலம் வந்தால் விரும்பியதை அடையலாம். தீயசக்தியும் விலகிவிடும்.வீட்டில் தினமும் கொஞ்சம் உப்பு மற்றும் பால் மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளித்து வரவும் அதே தண்ணீர் கொண்டு தரையை துடைத்து வர துய சக்தி வீட்டில் அண்டாது.