சுக்கிரன்-ராசி-கற்கள்-venus-zodiac-stones

எதிலும் தான் மட்டுமே முன்னிலை பெற வேண்டும். எதனையும் தான் மட்டுமே செய்ய வேண்டும். பக்கத்து வீட்டுல ஒருத்தர் கார் வாங்கி இருக்கிறார் அதேபோல நாம்  வாங்க வேண்டும் என்று நினைக்கிறவர்களா நீங்க?. பக்கத்து வீட்டுல ரெண்டு மாடி வீடு கட்டி இருக்காங்க, உங்க வீடு ஒரு மாடி தான் இருக்கு. நீங்களும் அதே போல அவரைவிட உயரமான கட்டிடம் கட்ட  நினைக்கிறிர்களா. இது எல்லாமே நம்ம கையில கிடையாதுங்க. இதற்கு காரணம் சுக்கிரன் ஒரு மனிதனின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் மட்டுமே அது நடக்கும். அந்த வகையில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி வேண்டும் என்று சொன்னால், சுக்கிரன் கிரகம் 2,4,6,10 பாவங்களோடு தொடர்பு கொண்டால் நன்மையை கொடுக்கும். அப்படிப்பட்ட மனிதர்கள் வைர மோதிரம் அணிந்து கொள்ளலாம்.ஆணுக்கு சுக்கிரன் பெண்ணுக்கு செவ்வாய் திருமண உறவுகளில் முக்கியம்.  திருமணம் நடக்க வேண்டும், கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு இல்லாமல் சந்தோசமா வாழனும் என நினைக்கிறவங்க, சுக்கிரன் ஏழாம் பாவ தொடர்பு கொள்கிற மனிதர்கள், தாராளமாக  வைர மோதிரம் அணிந்து கொள்ளலாம். ஒரு பெண் வைரம் மோதிரம் அணியலாமா? என்றால் கண்ணை மூடிக்கொண்டு அணிவது தவறு. சுக்கிரன் 8 12 பாவங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது நிச்சயமாக அந்தப் பெண்மணி வைர மூக்குத்தி அணிய கூடாது. வைர மோதிரம் போடக்கூடாது. வைர மோதிரத்தை பொறுத்தளவில் வாழவும் வைக்கும்.வீழவும் வைக்கும்.