சந்திரன் கிரக காரகம் சந்திரன் காரகத்துவம்

அனைத்து கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டு வலம் வருகின்றன. ஆனால் சந்திரன் பூமியை மட்டுமே மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது . சந்திரன் என்பது பூமியின் துணைக் கோளாக இருக்கிறது. வானவியலில் சந்திரனை ஒரு கோலாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நமது ஜோதிடத்தில் சந்திரனை நம்மவர் கோளாக வைத்திருக்கின்றோம். சந்திரன் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசி ஜென்ம ராசி என்கிறோம் . நமது ஜோதிடத்தில் சூரியனுக்கு அடுத்ததாக நட்சத்திர அந்தஸ்தை பெறுகின்ற பெரிய கிரகமாக இருக்கின்றது.  சந்திரனை பொருத்த அளவில் உடலுக்கு காரணமாக இருக்கின்றார்.ஏற்கனவே சொன்னமாதிரி சூரியனை பொறுத்தளவில் உயிருக்கு காரணமாக இருக்கின்றார். இருக்கின்ற கிரகங்களிலேயே ராசி மண்டலம் என்கின்ற ஜோதிட மண்டலத்தில் வேகமாக சுற்றி வருகின்ற கிரகம் சந்திரன். அந்த வகையில் வேகமாக செய்கின்ற ஒரு காரியத்திற்கு சந்திரன் காரகம்.  சந்திரனை உடல் என்று நாம் சொல்வதால், உடலுக்கு தேவையான உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சந்திரன்  காரகமாக வைத்துக்கொள்வார். குறிப்பாக சமைக்கின்ற உணவுகள், காய்கறிகள், சந்திரன் காரணமாக மாறிவிடுவார்.  சீக்கிரம் கெட்டுப் போகிற பொருள்கள் எல்லாமே சந்திரன் காரகன் என  எடுத்துக்கொள்ளலாம்.

மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சந்திரன் தான் காரணம். ஏற்கனவே நாம் சொன்ன மாதிரி சூரியன் தலை, மூளை சம்பந்தப்பட்ட விஷயம் என்றால், சந்திரனும் மூளையில் சிந்தனைக்கு காரணமாக மாறிவிடுகிறார். ஒரு வேலையை ஒரு மனிதன் செய்ய வேண்டும் என்பதை இலக்கணம் முதல்  12 பாவங்கள் மூலமாக சூரியன் தான் முடிவு செய்கிறார். ஆனால் அந்த வேலையை எந்தெந்த காலக்கட்டங்களில் செய்ய வேண்டும் என்பதனை தசாபுத்தி மூலமாக சந்திரனே முடிவு செய்கின்றார் . இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிடலாம். குடும்பத்தலைவன் வருமானத்தை எந்த விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று மனைவி முடிவு செய்வதை போல சந்திரனை  மாதுர் காரகன் என்று சொல்கின்றோம். அந்த வகையில் சந்திரன் காரணமாக உறவு முறை என்பது தாயைக் குறிக்கும் மாமியார் அத்தை அண்ணி மூத்த சகோதரி ஆகியோருக்கும் காரகமாக சந்திரன் வருகின்றார். சந்திரன் வேகமாக நகரக் கூடிய கிரகம் என்பதால் வெளிநாட்டு பயணம்.  அலைச்சல். வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள். சந்திரன் தான் காரகம் வைக்கின்றார். சந்திரன் வெண்மை நிறத்துக்குக் காரகமாக இருக்கின்றார். உணவு பொருட்களில் பால், தயிர், அரிசியை குறிக்கின்ற கிரகமாக இருக்கின்றார். ஏரி, குட்டை, ஆறு ,கடல் போன்ற நிலைக்கு சந்திரன் காரணமாக வருகின்றார். உடலில் உள்ள இரத்தம், அதிலுள்ள நீருக்கு சம்பந்தப்பட்ட காரகமாக இருக்கின்றார். மனித உடலில் 70 சதவீதம் நீராக உள்ளது என்று சொல்கிறார்கள். அந்த நீருக்கு காரகமாக இருக்கின்றார். அதனால்தான் உடலுக்கு காரணம் என்று சொல்கின்றோம். ஒரு மனிதன் அமைதியான தோற்றம், மனக்குழப்பங்கள், பைத்தியம் பிடிப்பது, குளிர் காலநிலை, சளி, சீதள நோய்கள், ரத்த அழுத்த நோய்கள், கடலில் கிடைக்கும் முத்து, அலுமினியம், ஈயம், நீரில் வாழக்கூடிய உயிரினங்கள், சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரகம், வெள்ளை நிற பட்டு, வெண்குடை, இரவு நேர கால நிலை , உணவு விடுதிகள், தெய்வங்களில்  காமாட்சி அம்சம் சந்திரன் காரகமாக எடுத்துக் கொள்கிறார். குறிப்பாக திருமண முகூர்த்தங்கள் எல்லாமே சந்திரனை மையமாக வைத்து குறிக்கப்படுகிறது. ஆலயங்களில் தெய்வ வழிபாடு. திருவிழா. முக்கிய விரதங்கள். சந்திரனின் நட்சத்திரம் ,திதி, பஞ்சாங்கம் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. எல்லா ஜோதிட புத்தகங்களிலும் வளர்பிறைச் சந்திரன் நன்மை செய்பவராகவும் ,தேய்பிறை சந்திரன்  கெடுதல் செய்பவராக கூறப்பட்டுள்ளது. ஒரு ஜாதகத்தில் சந்திரன் 2,4,6 ,10 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது, பணம் மூலம் வெற்றியும், தொழில் மூலம் வெற்றியும் கிடைக்கும் அதைச் சந்திரன் 1,3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது ஒரு நடுத்தர வாழ்க்கையும், பெரிய அளவில் கடன் இல்லாத, ஒரு மன நிம்மதியோடு வாழக்கூடிய வாழ்க்கையும் கொடுப்பார். அதே சந்திரன் 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது வேலை இல்லாத நிலை, கடன் கேட்டால் கிடைக்கும் நிலையை ஒரு மனிதனுக்கு கொடுப்பார். அதே சந்திரன் 8 ,12 பாவங்களை தொடர்பு கொள்ளும்போது வலி, வேதனை கஷ்டங்களை கொடுக்க கூடிய ஒரு நிலையை தசா புக்தி காலங்களில் கொடுப்பார். எது எப்படி இருந்தாலும், சந்திரனை பொறுத்தளவில் வேகமாக நகரும் கிரகம் என்பதால் இந்த பலன்கள் கூட பெரிய அளவில் பலன் கொடுக்காது நடுத்தரமாக இருக்கும். நல்ல பலன்களை கொடுப்பது என்பது கூட குறைவாகவும், கெட்ட பலன்களை கொடுப்பதும் குறைவாக இருக்கும் என்பது திண்ணம்.