ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதிசயங்கள்… ரகசியங்கள்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதிசயங்கள்… ரகசியங்கள்!

வைணவர்களின் திருத்தலமான ஸ்ரீரங்கம் ஆன்மிகக் கோயிலாகத் திகழ்கின்றது இதன் ரகசியங்கள் அதிசயங்கள் உங்கள் பார்வைக்கு,
 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை உடையது வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில்  முதன்மை தளமாக செயல்படுகின்றது.
பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், ‘மங்களாசாசனம்’ பெற்று பாடிய  அற்புதமான திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று வைகுந்தம் மற்றொன்று திருப்பாற்கடல்.அதற்கு நிகரான ஆலயம் ஆகும்.

இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் உள்ள ஆலயமாக  இருக்கிறது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
 
கோயில், ‘நாழிக்கேட்டான் வாயில்’ வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.இவர்களைத்தாண்டித்தான் பெருமாள் தரிசனம் நமக்கு கிடைக்கும்.

கோயிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை பெருஞ்செல்வங்களான , ‘சங்க நிதி’, ‘பதும நிதி’ உருவங்களுடன் இருக்கின்றனர்.

* மூலவர், உற்சவர்,  ரங்கநாயகி தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
* மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோயில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.
* கோயில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
* இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

இங்குள்ள தாயார் அனைத்து தாயாருக்கும் பெரியபிராட்டியாக இருக்கின்றார்கள்.இந்த பெருமாட்டியை வணங்கும் போது மற்ற தாயார்களையும் வணங்கியது போல ஆகிவிடும்.இங்குள்ள தாயாரை வணங்காமல் மற்ற திவ்ய தேசத்தில் உள்ள தாயார்களை வணங்கினாலும் இங்குள்ள தாயாரை வணங்கும் போது மட்டுமே வழிபாடு நிறைவு பெறும்.
மீண்டும் வேறு ஒரு ஆலய தகவலுடன் சந்திப்போம்.
என்றும்

அன்பு கலந்த நன்றிகளுடன்,

வாஸ்து மற்றும் ஆலயம் சார்ந்த சமுகப்பணிகளில். உங்கள் சூட்சும வாஸ்து நிபுணர்

அருக்காணி அ ஜெகன்னாதன்

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)