கோயிலில் வரிசை| பேருந்து ரயிலுக்கு வரிசை| தியேட்டருக்கு வரிசை

ஆறின் கரை  சரியாக இல்லை என்று சொன்னால் நதி நீர் என்பது கடலுக்குச் செல்லாது. அதுபோலதான் கட்டுப்பாடு என்கிறவிசயம் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது வெற்றி என்கிற இலக்குக்கு சென்றடைய முடியும். ராணுவம், காவல்துறை இரண்டுமே  ஒரு கட்டுப்பாடான நடைமுறைகளை கொண்ட ஒரு துறை  மீறினால் தண்டனை உண்டு. இதே கட்டுப்பாடுகளை அரசு, மற்ற துறைகளில் 3கொண்டு வந்தால் நாடு நலம்  பெற்று விடும். பயன்கள்  நாட்டுக்கு கிடைக்கும். வளர்ந்த நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நம்ம நாட்டுல ஜனநாயகம் என்கிற விசயம் அதிகமாக இருப்பதனால்,மற்றும் மக்கள் தொகை அதிகமாக இருப்பதனால் கட்டுப்பாடுகளை பக்கத்திலிருந்து பார்த்து அதோடு விட்டு விட்டு போகக்கூடிய நிலை இருக்கிறது. இதனால் நாட்டில்  முன்னேற்றம்  பாதிக்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கு காரணம்.சீன தேசத்தின் கட்டுப்பாடுகள் என்கிற காரணத்தினால் தான் அந்த நாடு, முன்னேற்றம் ஏறாபட்டு இருக்கிறது. ஆக கட்டுப்பாடுகளை கொண்டு வரும் போது நிச்சயமாக முன்னேற்றம் கிடைக்கும். அமைப்பு சாரா தொழிலாளர்களை எந்தவொரு நிறுவனமும் பதிவு என்பது இருக்க வேண்டும்.   அவங்களுக்கு ஒரு ஐடி கொடுக்கிறது, ஒரு பிராவிடண்ட் பண்டு மாதிரி விஷயத்தை கொடுக்கிறது, ஒரு கம்பெனியிலிருந்து வேறு கம்பெனிக்கு மாறும்பொழுது நிறுவனம் அனுமதியோட போறது, பழைய கம்பெனியின் அனுமதி இல்லாம வேற கம்பெனிக்கு போக முடியாது. பழைய கம்பெனி வேலை கொடுத்தே ஆகணும். இந்த மாதிரி சில கட்டுப்பாடுகளை கொடுக்கும் பொழுது வேலைக்கு ஆள் கிடைக்கும். தொழிலும் சிறப்பாய் இயங்கும். அதேபோல் வேலை சார்ந்த மக்களுக்கும் பாதுகாப்பு இருக்கும். அதேபோல் ஒழுங்கு எங்கும் நிலையில் இருந்து உற்பத்தி பெறுகி நிடு வளம் பெறும்.ஆக கட்டுபாடுகள் என்பது கோயிலில் வரிசை, பேருந்து ரயிலுக்கு வரிசை, தியேட்டருக்கு வரிசை, இன்றைய கொரோணா காலகட்டத்தில் உணவு விடுதிகளில் வரிசையில் நிற்பது ,
பிரபலமாக இருக்கக் கூடிய உணவு விடுதியில்  தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவருக்குமே உணவு வாங்குகிற போது வரிசையில் இருக்கவைப்பது இந்த விசயத்தில் தெரிந்த மனிதர்களை உள்ளே விடுவது, தெரியாத மனிதர்களே வரிசையில் நிற்க வைப்பது, இந்த விஷயத்தை முதலாளிகளும், செய்யக்கூடாது. அதேபோல பொருள் வாங்க வருகிற மக்களும் வரிசையில் நின்று வாங்க வேண்டும். இந்த கட்டுப்பாடு எல்லா இடங்களில் இருக்க வேண்டும்.  நம்ம நாடு உலகில் முதல் நிலையில் வரவேண்டும், நாட்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கட்டுப்பாடு முக்கியம்.