தமிழகத்தில் குறிப்பாக கொங்கு நாட்டின் தவறான போர்டிக்கோ பற்றிய விளக்கம்.

கொங்கு நாட்டின் தவறான போர்டிக்கோ

privacy-entrance for vastu
privacy-entrance for vastu

 

 

 

 

 

 

 

வடக்கு பார்த்த வீடுகளில் வடக்கு ஈசான்ய பகுதியில் உள்ள போர்டிக்கோவில் வடகிழக்கு மட்டுமே போர்டிக்கோ அமைப்பு இருக்கும். ஒன்று இழுத்த அமைப்பாக இருக்கும். அல்லது வடமேற்கு வெட்டுப்பட்ட அமைப்பாக வடகிழக்கில் உள்வாங்கி இருக்கும் இதுவும் மிகப்பெரிய தவறு ஆகும்.
கிழக்கு பார்த்த வீடுகளில் கிழக்கு பகுதி போர்டிக்கோவில் வடகிழக்கு மட்டுமே போர்டிக்கோ அமைத்துவிட்டு தென்கிழக்கு வெட்டுப்பட்டது போல் உள்ள அமைப்பு அல்லது வடகிழக்கில் கிழக்கு பகுதி உள்வாங்கி இருக்கும். இந்த இரண்டு திசைகளில் இருக்கும் தவறு தவிர்க்க வேண்டும்.

வடகிழக்கில் கலர் நிறத்தில் டைல்ஸ் ஒட்டி நான்கு திசைகளிலும் சரிவான அமைப்பு ஏற்படுத்தி இருப்பார்கள். அதாவது பிரமிடு போல் போர்டிக்கோ அமைப்பு வைப்பதும் குற்றம் ஆகும்.
தெற்கு மேற்கு பகுதிகளில் போர்டிக்கோ அமைப்பை தவிர்ப்பது நல்லது. அப்படியும் அமைத்தே ஆக வேண்டுமென்றால் அதற்கு இணையாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நல்ல வாஸ்து நிபுணரின் துணைகொண்டு செயல்படுவது நல்லது.

வாஸ்து குற்றம் உள்ள போர்டிக்கோ அமைப்புள்ள வீடுகள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் அந்த வீட்டில் வசிப்பார்கள். இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு அந்த வீடு ஆள் அரவம் இல்லாத வீடாக மாறிவிடும்.

தவறான வடகிழக்கில் இருக்கும் போர்டிக்கோ அமைப்பு வீடுகளில் மூத்தது ஆண்வாரிசு என்றால் அவர்கள் அந்த வீட்டில் வசிக்கும் போது ஆண் வாரிசுகள் வேலை சார்ந்த பிரச்சனையை சந்திப்பார்கள். அல்லது வீட்டின் குடும்பத்தலைவரின் வருமானம் என்பது குறைவாக இருக்கும். இதனால் பற்றாக்குறை வாழ்வே வாழ்வார்கள்.

ஒரு வீட்டின் போர்டிக்கோ அமைப்பில் வாஸ்து குற்றம் வடமேற்கு தென்கிழக்கு பகுதியில் குற்றமாக இருக்கின்ற பட்சத்தில் அந்த வீட்டில் உள்ள வாரிசுகளுக்கு காதல் திருமணம் மற்றும் கலப்பு திருமணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

போர்டிக்கோ தவறான காரணமாக கடனான மனிதர்களை எனது வாஸ்து பயணத்தில் பார்த்ததும் உண்டு. அடிக்கடி விபத்து நடந்த வீடுகளை வாஸ்து ஆராய்ச்சி செய்ததும் உண்டு.அதன் அடிப்படையில் உங்களுக்கு இக்கட்டுரையை வழங்கினேன்.

எங்கள் கொங்கு நாட்டில் போர்டிக்கோவை மிகப்பெரிய அமைப்பில் பதினாறு அடிகளுக்கு இருபது அடிகளுக்கு போர்டிக்கோ அமைப்பது என்பது கட்டிட பேஷனாக கருதக்கூடிய இன்றைய சூழ்நிலையில் வாஸ்துவில் அனுபவம் உள்ள வாஸ்து நிபுணரின் உதவியால் உங்களுடைய வீட்டின் போர்டிக்கோவை அமைத்து கொள்வது சிறப்பு.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,

 

Vastu Tips for portico
Vastu Tips for portico

 

 

 

 

 
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.