குழந்தை வளர்ச்சியில் வாஸ்துவின் பங்கு!

குழந்தை வளர்ச்சியில் வாஸ்து
குழந்தை வளர்ச்சியில் வாஸ்து

குழந்தை வளர்ச்சியில் வாஸ்து

 

ஒரு குழந்தை  வளரும்போது பலப்பல மாற்றங்களை அது எதிர்கொள்கிறது.  முடி வளருவது,பல் முளைப்பது, சாப்பிடுவது, தவழ்வது, நடக்க முயற்சிப்பது  அதற்கு பின்னர் ஓடுவது என்று அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. இந்தக் குழந்தை வளர்ச்சியில் முழுக்க முழுக்க வீட்டின்  வாஸ்து  அமைப்புகள் துணை புரிகின்றன.

 
குழந்தைகள்  பல்முளைக்கும் கட்டத்தில் எந்தப் பொருளையும் கடிக்க முயற்சிக்கும். இதற்காக பழங்காலத்தில் கருங்காலி,பலாமரம், சந்தனமரம், ஈட்டி  போன்ற மரங்களில் செய்த மரப்பாச்சி பொம்மை, சூப்பும் கட்டை ஆகியவற்றை குழந்தை உள்ள இடத்தில் வைத்திருப்பார்கள்.
இதனால் இந்த மரத்தை எடுத்துக் கடிக்கும் குழந்தைக்கு அதிக அளவில் உமிழ்நீர் சுரந்து செரிமானத் தன்மையை மேம்படுத்தி அதன் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது. அதோடு மண், கல்லை எடுத்து விழுங்கும் பழக்கம் குழந்தைக்கு ஏற்படாதவாறு தடுக்கப்படுகிறது. மூன்றாவது பல் முளைக்கும்போது அதன் அரித்தல் காரணமாக எதையாவது கடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும். இதற்காகவே சூப்பும் கட்டை, மரப்பாச்சி பொம்மைகளை குழந்தைகள் உள்ள இடத்தில் வைத்திருப்பார்கள்.இந்த மரப்பாச்சி பொம்மைக்கும் குழந்தைகளின் எண்ண வளர்ச்சிக்கும் கண்டிப்பாக தொடர்பு உண்டு.
 பொம்மையை கடிக்கும் போது ‘‘மரம்” தொடர்புள்ள வாஸ்து கூறும்  பெரிய சூட்சும அம்சங்கள் ஏற்படுகின்றன. பொம்மை சற்றுப் பெரிய அளவில் இருப்பதால், குழந்தையால் விழுங்க முடியாது, கடிக்க மட்டுமே முடியும். இதனால் பாதுகாப்பும், விஞ்ஞானபூர்வமாக உடல்நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நிலையையும் குழந்தைகள் பெறுகின்றன. இதனால் குழந்தையின் காது, வாய் மற்றும் தொண்டைக்கு நல்ல இயக்கப் பயிற்சி கிடைக்கிறது.

 

 இந்த காரணமாக. ஒன்று முதல் ஐந்து வயதுவரை குழந்தையின் மூளை வேகமாக வளர்ச்சியடைகிறது. இந்த வயதில் பார்வையில் பதிபவை என்றென்றும் குழந்தை நினைவில் நிலைத்திருக்கும். இப்படி குழந்தை வளரும் காலகட்டத்தில் அறையில் அழகிய படங்களை வீட்டில் பொறுத்துவது வாஸ்து ரீதியாக மிகவும் நல்லது.  அறிவியலும் இதையே கூறுகிறது.
 வீட்டின் வடக்கு கிழக்கு சுவர்களில் நீர்அருவிகள் மற்றும் கடல் போன்ற படங்களை வைக்கலாம்.  தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில்  பறவைகள் யானை, குதிரை, மயில், முயல், ஆடு, பசு, மாடு-கன்று மற்றும், மலை, மரங்கள், கடலலைகள், மலைவாசஸ்தல வீடுகள், சிரிக்கும் முக ஓவியங்கள் இப்படிப்பட்ட படங்களை ஆகியவற்றால் செய்து அலங்கரிக்கலாம்.

 
 சிங்கம், புலி, பாம்பு, தேள், பூரான் போன்ற மாமிச பட்சிணிகளின் படங்கள் குழந்தையின் மென்மைத் தன்மையைப் போக்கி, கடும் ஆக்ரோஷம் கொள்ளும் மனதை குழந்தைக்கு உருவாக்கி விடும். சண்டை காட்சி, இரையை கடித்து குதறுவது, போர் காட்சி, ரத்தம் சொட்டுவது, கத்தி, வீச்சரிவாள், பீரங்கி, துப்பாக்கி ஆகியவற்றை குழந்தை உள்ள அறையில் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். மன்னர்கள் காலத்தில் வேட்டையாடிய விலங்குகளை பாடம் செய்து கொம்பு, முகங்களை அரண்மனை, கோட்டைகளை அலங்கரித்திருந்தார்கள். அவற்றை பார்த்த ராஜகுடும்பத்து சிறுபிள்ளைகள் இள வயதிலேயே போர்க்குணம் கொண்டிருந்தார்கள்.  இப்படிபட்ட உருவங்களில் மான் தவிர வேறு காட்டு விலங்குகள் வேண்டாம்.

 
எனவே குழந்தை வளரும் பருவத்தில் சந்தோசமான உணர்வுகளை உருவாக்கும் காட்சிகளை அவர்களின் பார்வைக்குப் படும்படி இருத்தல் நல்லது. 
 குழந்தைகளின் கண்களில் படும்படி பழங்களை மேஜை மீது வைப்பதும், ஓவியங்களாக இருப்பதும்,  குழந்தைகளை அந்தப் பழத்தை அடைய முயற்சி செய்ய வைக்கும். அப்பழங்களை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும்.
 திராட்சை, அன்னாசி , பலா, மாம்பழம்  இப்படி படமாக  அலங்காரம் செய்யயும் போது, வாஸ்து ரீதியாக அக்குழந்தைகள் ஆரோக்கியமான சூல்நிலை ஏற்படும் என்று வாஸ்து அறிவியல் கூறுகிறது.

 
 அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், பெரும் புகழ் பெற்றவர்கள் வீடுகளில் மேற்சொன்ன மென்மையான படங்கள் இடம் பெற்றிருப்பதை அறியலாம். குழந்தைகளின் பிரதான பொழுதுபோக்கே விளையாட்டுதான். அதன் போக்குக்கு விளையாட அனுமதித்தாலும், சில விளையாட்டுகள் குழந்தையின் அறிவுத்திறனை தூண்டுவதாகவும் உடல் அங்கங்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பவையாகவும் உள்ளன.

 
கிலுகிலுப்பை, நடைவண்டி, உருவங்களை ஒன்று சேர்ப்பது, கணக்கீடு செய்யும் அபாகஸ், ஓவியம் வரைவது (சுவரில் கிறுக்காத குழந்தைகளே இல்லை எனலாம்) மணல் வீடு, கல் வீடு கட்டுவது, சிறு சிறு விலங்கு பொம்மைகளுடன் விளையாடுவது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கிலுகிலுப்பையுடன் விளையாடுவதால் காது கேட்கும் திறனை அளவிடமுடியும். கிலுகிலுப்பை ஒலியில் குழந்தை உரிய கவனம் செலுத்தவில்லை எனில் காது, தொண்டையில் கவனம் தேவை என்கிறது வாஸ்து சாஸ்திரம். இதற்கெனவே பிறந்த குழந்தையின் தொட்டில் மீது பொம்மையை  கட்டி வைக்கின்றனர். கைக்கு எட்டாத உயரத்தில் விளக்குகளை,  எரிய விடுவதின் மூலம் குழந்தையின் கண்ணொளியை மேம்படுத்த இயலும். 

 

குழந்தை வளர்ச்சியில் வாஸ்து
குழந்தை வளர்ச்சியில் வாஸ்து

வீடு கட்டுவது, உதிரியான உருவ பொம்மைகளை ஒன்று சேர்ப்பது போன்ற விளையாட்டுகளால் குழந்தைகளின் சிறுமூளை வெகுவாக செயல்பட்டு மூளைபலம் பெற உதவுவதாக இன்றைய அறிவியல் குறிப்பிடுகிறது. டிராகன் பொம்மை மற்றும் வண்ண மீன்தொட்டி அருகில் விளையாடும் குழந்தை கை கால் அசைத்து தன் வளர்ச்சிக்கான புது பலம் பெறுகிறது, என்கிறது சீன வாஸ்து. கண்களுக்கு குளுமையான இளம் நீலம், இளம் பிங்க், இளம் பச்சை போன்ற வர்ணங்கள் குழந்தையின் மேதாவித்தனத்தை மேன்மைபடுத்துகின்றன. எனவேதான் குழந்தைகளுக்கான பொம்மைகள் கருப்பு அல்லது அடர் வண்ணத்தில் தயாரிக்கப்படுவதில்லை. செய்யப்படுவதில்லை. ஒரு வயது முடியும்வரை குழந்தைகள் சாப்பிடுவதும், பிறகு தூங்குவதுமாகவே இருக்கும். தூக்கம் குறைந்தால் வளர்ச்சி வெகுவாக பாதிக்கும். இதற்கு வாஸ்து ரீதியாக படங்களும் ஒரு அதிர்வலைகளை ஒரு இல்லத்தில் வாஸ்து ரீதியாக ஏற்படுத்துகின்றன. 

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)