குரு பெயர்ச்சி பலன்கள் | மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுகின்றோம். நவகிரகங்களில் தன காரகன்  என்று சொல்லக்கூடிய சுப கிரகமாக இருக்கக்கூடிய கிரகம் என்பது குரு  ஆகும்  . ஆகவே எப்பொழுதுமே நன்மையான பலன்களைக் கொடுக்கக் கூடிய நிகழ்வாக குருபகவான் இருக்கின்றார். குருபகவான் வருகின்ற   நவம்பர் மாதம் 13.11.2021ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.  கும்பம்  ராசிகளில் இருக்கும் குரு பகவான் 2022ஆம் ஆண்டு நான்காம் மாதம் வரை கும்ப ராசியில் இருக்கின்றார். ஆகவே அனைத்து ராசிகளுக்குமானகுரு பெயர்ச்சி பலன்களை தெரிந்து கொள்வோம்.

குரு பெயர்ச்சி பலன்கள் வரிசையில் மேஷ ராசி பலன்கள்பற்றி பார்ப்போம். சோதனைகளை சாதனைகளாக மாற்ற துடிக்கின்ற மேஷ ராசி மக்களுக்கு தற்சமயம் வரை பத்தாம் இடத்தில் அமர்ந்து பலன்கள் கொடுக்கின்ற குருபகவான் இதுவரையில் உங்களுடைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார் . இப்பொழுது 13 11 2021 முதல் 13.4.2022 காலகட்டம் வரை லாப ஸ்தானமாக இருக்கக்கூடிய  பதினொன்றாம் வீடான கும்ப ராசிக்கு பயணப்படுகிறார்.இனிமேல்   உங்களுடைய திறமைகள் வெளிச்சத்துக்கு வருகிற நிகழ்வாக இருக்கும். சின்ன சின்ன வேலைகளைக் கூட தற்போது முடிக்க முடியவில்லையே என்று ஏங்கிய மக்கள், அந்த நிலை அப்படியே இனிமேல் மாறும். பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் பணவரவில் இருந்த தடைகளை, லாபத்தில் இருந்த தடைகளை,மற்றும் கடன் பிரச்சினைகள் எல்லாம் தீர்வுள் கண்டிப்பாக கிடைக்கும்.மற்றும் பெரியவர்கள் மற்றும் மூத்தோர்களின் பணவரவு நட்பு கண்டிப்பாக கிடைக்கும். ஏனெனில் 11ம் பாவம் என்பது லாபஸ்தானம் ஆக இருந்தாலும் கூட, மூத்த சகோதர பாகமாக இருக்கின்றபடியால் மூத்த சகோதர உறவுகள் மேம்படும். ஆக மொத்தம் இந்த காலகட்டம் அது அற்புதமான காலகட்டமாகும்.

ஆக இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் அடிப்படையில் நூற்றுக்கு நூறு மார்க் அடிப்படையிலும், ஐம்பதுக்கு ஐம்பது மார்க் அடிப்படையிலும், நூற்றுக்கு நூறு தவறான பலன்களை கொடுக்கும் என்கிற அடிப்படையிலும், மூன்று வகையாக ராசிகள் சார்ந்த பலன்களை நாம் பிரித்து பார்க்க வேண்டும். இந்த மேஷ ராசிக்கு உரிய குருபெயர்ச்சி பலன்கள் என்பது நூற்றுக்கு நூறு நல்ல பலனைக் கொடுக்கும்  பெயர்சியாக இந்த கும்ப ராசிக்கு குரு நகரும் நிகழ்வு,மேஷ ராசிக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

எனது வீடியோவை பார்க்க கிளிக் செய்யுங்கள் https://youtu.be/soOjRd3_FBE