காசு இல்லாமல் வாஸ்து மாற்றம்

நண்பர்களுக்கு வணக்கம் .
ஒரு வாஸ்து ரீதியாக ஒரிடத்திற்கு என்னைப்போல ஒரு வாஸ்து நிபுணர் வரும்பொழுது அவர் பல சீர்திருத்தங்களை சொல்கிறார். இதனை மாற்றித்தான் ஆக வேண்டும் என்கிற விஷயத்தை சொல்கிறார். அப்படி சொல்கின்ற போது அதனை செய்யக்கூடய ஒருவரின் பொருளாதார நிலை ஒத்துழைக்கவில்லை. அப்போது என்ன செய்வது?ஒரே ஒரு விஷயம் மட்டும் நீங்கள் செய்யுங்கள். உங்கள் இல்லம் இருக்கும் அமைப்பாக அதன் அமைப்பு உள்ள ஆலயங்களுக்கு செல்லுங்கள்.மேற்கு பள்ளம் உள்ளதா?மேற்கு குளம் இருக்கும் ஆலயம் செல்லுங்கள். தொடர்ந்து சென்று வாருங்கள்.ஆக ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற விஷயத்தின் அடிப்படையில், உங்களுக்கு நிச்சயமாக மாற்றம் நடக்கும். முடிந்தால் உங்கள் இல்லத்தில் அதற்கு முன்னால் ஒன்றே ஒன்று மட்டும் செய்யுங்கள் . வடக்கிலும், கிழக்கிலும், ஜன்னல் இருக்கும் அமைப்பை ஏற்படுத்தி விடுங்கள். அல்லது கொஞ்ச நாள் வடகிழக்கு சார்ந்த வடக்கு மற்றும் கிழக்கிலும் சாலை இருக்கும் இல்லத்திற்கு வாடகைக்கு சென்று விடுங்கள். இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வைக்கும்.