கட்டிடத்தின் திசைகளும், வாஸ்துவும்,

vastu directions for home
vastu directions for home

கட்டிடம் வி திசைக்கு

இல்லாத கட்டிடமாக இருக்கவேண்டும்.

 

ஒரு ஊரில் நன்றாக வாழாத மனிதர்களை திக்கற்றவர்கள் என்று சொல்கின்றோம்.அதேபோல ஒரு வீட்டிற்கு திசைகள் இல்லையெனில் அந்தவீடும் திக்கற்ற வீடாக ஆகிவிடும்.அந்தவகையில் ஒரு வீட்டிற்கு திசைகள் என்பது மிகமிக முக்கியம்.

இந்தபூமியை மேலும் கீழுமாக இரண்டாக பிரிப்பது பூமத்திய ரேகை ஆகும். இந்த ரேகை சூரியனுக்கு அருகில் இருப்பது மட்டுமின்றி, சூரியனின் அச்சுக்கு செங்குத்தாக இருக்கின்றது. பூமியின் கிழக்கு மேற்காக, செல்லுகின்ற கோட்டிற்கு true east என்று சொல்லப்படுகிறது.இதனை சமஸ்கிருத மொழியில் சுத்த பிராட்ச்சி என்று அழைக்கப்படுகிறது.இதற்கு எதிர்திசையில் செல்லுகின்ற கோடுகளை சுத்த வடக்கு தெற்கு கோடுகள் என்று அழைக்கப்படுகிறது.இதன் நின்கு பகுதிகளையும் நாம் திசைகள் என்று கூறுகின்றோம்.இதற்கு மற்றொரு பெயராக ஆங்கிலத்தில் cardinal direction என்று கூறுகின்றோம்.

 

இந்த தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு கோடுகள் ஒரு பகுதியின் கடைசியில் இருந்து இன்னொரு பகுதியின் கடைசிக்கு சென்றாலும்,இந்த நான்கு கோடுகள் சந்திக்கும் பூமியின் நடுப்பகுதியில் இருந்துதான் இந்த திசைகளின் சக்தி வெளிவருகிறது.அதாவது பூமியின் மையத்தில் இருந்து பூமத்திய ரேகைக்கு இணையாக வரக்கூடிய பிராட்ச்சி சூத்ரா (east line) கோடான பிரதீட்சி சூத்ரா (west line) இந்த இரண்டும் தொடங்கக்கூடிய பகுதியே பிரம்மசூத்ரா எனப்படுகிறது. இந்த பிரம்ம சூத்திராவிற்கு செங்குத்து கோடாக இருக்கக்கூடியதே சோமசூத்ரா என்று சொல்லக்கூடிய வடக்கு தெற்கு திசைகள் ஆகும்.

 

ஆக பூமியில் கட்டகாகூடிய எந்தவிதமான கட்டிடங்களும்,பிரம்ம சூத்திரத்திற்கும்,சோமசூத்திரற்கும்,இணையாக கடாடப்படவேண்டும்.இதனையே நாம் பூகோள உருண்டையில் அட்ச மற்றும் துர்க ரேகைகளாக பார்க்கலாம். இவைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக சமதூரத்தில் இருப்பதோடு இல்லாமல்,பூமியின் மேல் கட்டம் கட்டிய பாதுகாப்பாக வெளித்தெரியாது உள்ளது. இந்த grid energy ஆனது நமது இந்திய கட்டுமானத்துறைக்கும்,சிற்ப கட்டிட கலைக்கும் துணையாக முக்கிய பங்கு வகிக்கின்றது.

 

ஒருவீட்டிற்கு அல்லது தொழிற்சாலைகளுக்கு வரைபடம் போடும் போது அந்த இடத்தின் திசைகளை அறிந்து என்னைப்போன்ற வாஸ்து நிபுணர்கள் நேரில் சென்று பார்த்து அந்த இடத்தின் திசையை திசைகாட்டி கருவி கொண்டு பார்த்தபிறகு,வரைபடம் வழங்க வேண்டும். நேரில் பார்க்காமல் வரைபடம் வழங்கும் போது வாஸ்துபடி அந்த கட்டிடம் இருந்தாலும் சில இடங்களில் பெரிய பலன்களை வழங்காது.

 

திசை காட்டும் கருவி
திசை காட்டும் கருவி

நான்குதிசைகளில் வீடு இருந்தால் அதன் பலன்களைப் பார்ப்போம். கிழக்கு பார்த்த இல்லங்களை கட்டி வாழும்போது நல்ல சுகமாக வாழும் பாக்கியம் கிடைக்கும். மேற்கு பார்த்த வீடுகள் என்றும் செழிப்பான வாழ்வு வழங்கும். வடக்கு பார்த்தவீடுகள் என்றும் செல்வநிலைக்கு குறைவிருக்காது. தெற்கு பார்த்த வீடுகளில் வசிப்பவர்கள் கட்டாயமாக இறைஅருளும் முன்னோர்களின் ஆசியும் இருக்கும். முன்னோர்களின் ஆசியை பெற்று என்றும் மகிழ்சிகரமான வாழ்க்கை வாழ்வார்கள்.ஆக மனித வாழ்விற்கு எந்த திசைகளும் தவறு கிடையாது.ஆனால் அங்குள்ள கட்டிடங்களை திசைக்கு இல்லாது கட்டும் போது இநாத பூமியின் ஆகர்சன சக்தி கிடைக்காது அவதிப்பட்டு வாழவேண்டிய சூல்நிலை ஏற்படும்.இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்குஒரு வாஸ்து நிபுணரை அழைக்கின்றிர்கள் என்றால் முதலில் அழைத்து பார்த்து கட்டிடத்தை கட்டுவது நல்லது.

 

மேலும் விபரங்களுக்கு,
 
ARUKKANI.A.JAGANNATHAN.
 
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
 
 
E-mail:
 
Contact:
+91 99650 21122(whatsapp)