கடின உழைப்பு | ஸ்மார்ட் வொர்க் | சென்னை வாஸ்து | chennai vastu

எல்லாரிடத்திலும் எல்லா திறமைகளும் இருக்கிறது கிடையாது. பாட தெரிகிற மனிதருக்கு ஒரு பாடலை எழுதத் தெரியாது. ஒரு கடின உழைப்பு செய்பவர்களுக்கு ஸ்மார்ட் வொர்க் தெரியாது. ஸ்மார்ட் வேலை செய்ரவங்களுக்கு கடின உழைப்பு தெரியாது. மனிதர்கள் என்பவர்கள்  எல்லாமே கலந்து இருக்கிற உருவம் தான்.

ஒருவருடைய பயிற்சியை தொடர்ந்து, ஒருவர் பார்த்து வரும் போது, ஒருவருடைய திறமையை , ஒருவருடைய செயலை தொடர்ந்து பார்த்து வரும் பொழுது அவரைப்போலவே திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். ஒரு இடத்தில் ஒருவர் வந்து நம்மை நிபுணர் என்றால் அந்த வார்த்தைக்கு முழுமனதோடு செயல்படுபவர்கள் எடுத்துக்கொள்ளலாம். எனது பயணத்தில் கூட இரண்டு வேலைகளை பார்க்கிற வாஸ்து பார்க்கிறவங்க சரியான நபர்கள் கிடையாது என்று சொல்லுவேன். அவர்கள் பணத்துக்காக பிரயாணம் பண்றவங்க அப்படின்னு ஒரு வார்த்தை எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் பல தொழில்களையும் செய்யலாம். ஆனா அந்த இடத்துல  குடும்பம் சார்ந்து இருக்கக்கூடிய உறுப்பினர்களை நிர்வாக  வேலைகளுக்கு பொறுப்பு கொடுத்து செய்ய வேண்டும்.

வேலைகளை  நேரத்திற்கு செய்தால் வெற்றியாளர் கிடையாது. ஒருவேலையை எனது இதயத்தின் ஆழத்திலிருந்து காதலித்து செய்யணும். அப்படி செய்யாம வெறும் வேலை போல நீங்க  செய்தா அதுல  முன்னேறுவது கடினம்.

திறமை இருப்பவர்கள் எல்லாமே வெற்றி பெற்றது கிடையாது .வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரும் திறமை உள்ளவர்கள் கிடையாது என்கிற வார்த்தை ஓரமாக வைத்துவிட்டு செய்தால் வெற்றி உறுதி. திறமை என்பது சராசரி வேலைக்கு கொஞ்சம் மேல்.  திறமை  தீப்பற்ற தொடங்கினால் , செயல் சிந்தனை  சூடு பறந்தால், எண்ணத்தின் விருப்பங்களே வாழ்க்கை என்கிற வெறி பிறக்கிற போதும், எட்டு திசைகளும் உங்களை திரும்பிப் பார்க்கும். வரலாற்றில் உங்களுடைய பெயர் இடம்பெறும்.