கடகம் | kadaga rasi | guru peyarchi 2021 to 2022 kadagam| Cancer | கடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

kadaga rasi | guru peyarchi

மனத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய சந்திர பகவானை ராசிநாதனாக கொண்டிருக்கும் கடக ராசி மக்களுக்கு இந்த 2021-2022 குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம். இதுவரையில் ஏழில் இருந்த குரு பகவான் இப்பொழுது அஷ்டமம் என்று சொல்லக்கூடிய எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் ஆகவே, இதுவரை நன்றாக இயங்கிக் கொண்டிருந்த உங்களுடைய செயல்கள் எல்லாம், இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்திற்கு பிறகு ஒரு சிரமத்தைக் கொடுக்கக் கூடிய , வாழ்க்கையில்  பயிற்சியாக இருக்கும் காலகட்டத்தில் இருக்கின்றிர்கள். அதாவது நீங்கள் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும், மனதால் ஒரு செயலை செய்யலாம் என்று இருப்பீர்கள் ஆனால், நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும். நடப்பது ஒன்றாக இருக்கும். அதே போல ஒரு பொது நிகழ்வு சார்ந்த விஷயங்களில், நீங்கள் நன்மை செய்யலாம் என்று அந்த காரியத்தில் ஈடுபடுவீர்கள். ஆனால் உங்களுக்கு கெட்ட பெயரைக் கொண்டு வரக்கூடிய ஒரு நிகழ்வை கொடுக்கும். ஆகவே இந்த குருப்பெயர்ச்சி நிகழ்வு என்பது தசாபுத்தி சாதகமாக இருக்கும் பொழுது நிச்சயமாக நன்றாக இருக்கும். இல்லை என்று சொன்னால் கொஞ்சம் இந்த பெயர்ச்சி முடியும் வரை,அதாவது இந்த குரு பகவான் மீன ராசிக்கு செல்லும் வரையில் ஒரு சில கஷ்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஆகவே இந்த காலகட்டங்களில் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை.ஆகவே புதிய கடனை கொடுப்பதும், பழைய கடனை வாங்குவதும் மிகவும் ஒரு கடினமான சூழ்நிலையாக இருக்கும் . மேலும் யாருக்காகவும் ஜாமீன் கொடுப்பதும், ஒரு தொழில் சார்ந்த நிகழ்வுகளில் பத்திரம் அடமானமாக வைப்பதும், கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் செய்யக்கூடாது என்பது எனது கருத்து . அதேபோல குடும்பம் சார்ந்த நிகழ்வுகளில் சலசலப்பு, சஞ்சலங்கள் கருத்துவேறுபாடு போன்றவை உருவாகும். மனைவி சார்ந்த உறவுகள் சார்ந்த சொந்த பந்தம் சொந்த உறவுகளில் சங்கடங்களையும், உறவுகளில் பிரிவினையை ஏற்படுத்தும். ஆகவே யாரும் தேவையில்லாத கடின வார்த்தைகள் பேசாமல் வார்த்தைள் குறைத்து கொள்வது நல்லது. ஒருசில குடும்பங்களில் கணவனை மனைவி பிரிந்து இருக்கும் சூல்நிலை கூட ஏற்படும்.மேலும் கல்வி சார்ந்த நிகழ்வுகளில் இருக்கக்கூடிய மக்கள் உயர்கல்வி சார்ந்த படிப்பிலும், பள்ளி கல்லூரி சார்ந்த படிப்பிலும், கண்டிப்பாக படிக்கின்ற வேலையை மட்டும் செய்ய வேண்டும். இல்லை என்று சொன்னால், உங்களை மனதை திசை திருப்பி பாதகமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.ஒருசிலர் வெளிநாட்டு படிப்பு சார்ந்து வேலை செய்து கொண்டு படிப்பார்கள். ஆனால் வேலைக்கு செல்லும் போது ,வேறுசில பிரச்சினை ஏற்பட்டு படிப்பு கூட பாதிக்கப்பட்ட சூல்நிலையை கொடுக்கும். ஆகவே மிகவும் கவனத்துடன் இருப்பது நலம். ஆகவே இறைவழிபாடு மற்றும் வியாழக்கிழமை விரதம் இருந்து , சைவ உணவுகளை  எடுத்துக்கொண்டு வாழும் பொழுது , கண்டிப்பாக இந்த குருபெயர்ச்சியின்  எதிர்மறை பலன்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

ஆனாலும் புலிப்பாணி சித்தர் பாடலான இதனையும் கவனத்தில் கொள்வது நலம்.இன்மை எட்டினில் வாலி
பட்டமிழந்து போம் படியானதும், மேற்கூறிய நிகழ்வு நடக்காது இருக்க  குலதெய்வ வழிபாடு மற்றும் இறைவழிபாடுகள் கை கொடுக்கும். ஆதாவது மழைக்கு குடை பிடிக்கும் நிகழ்வு நடக்கும் ஆனால் மழை வருவது என்பதும் அதனை தடுப்பது என்பதும் கடினமான செயல்.ஆனால் பிறந்த நேர ஜாதகத்தில்  நடப்பு திசாபுத்திகள் துணை இருந்தால் மேற்கூறிய கெடுபலன்கள் குறையும்.

எனது கடக ராசி குரு பெயர்ச்சி பலன் வீடியோவை பார்க்க கிளிக் செய்யுங்கள் https://youtu.be/xUY3Dibrv9k