ஏழு கிழமைகளில் சம்பராணி தூபங்கள்

 

 

 

 

 

வாரத்திற்கு ஏழு கிழமைகளில் சம்பராணி மற்றும் மருதோன்றி தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

ஞாயிறு கிழமை தூபம் போடும் போது ஆத்ம பலம், சகல செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்.
திங்கள் கிழமை தூபம் காட்டும் போது தேக, மன ஆரோக்கியம், மனஅமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.செவ்வாய் கிழமை சாம்பிராணி காட்டும் போது எதிரிகளின் போட்டி, பொறாமை மற்றும் தீய – எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள், கடன் நிவர்த்தி.

புதன் கிழமை தூபம் காட்டும் போது நமக்கு ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்தல் மற்றும் சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, மகாவிஷ்ணு அருள் கிடைக்கும்.

வியாழன் அன்று சாம்பிராணி காட்டும் போது சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் ஏற்படும்.
வெள்ளி அன்று தூபம் காட்டும் போது லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்திகளும் கைகூடும்.

சனிஅன்று தூபம் காட்டும் போது சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், அருளும் பெற்று நீங்கள் செய்யும் வேலைக்கு ஆள் பற்றாக்குறை நீங்கும்.