எண் கணிதம் அறிமுகம்

எண் கணிதம் என்கிற வகையில் இயற்கையாகவே கிரகங்களை உள்நுழைத்து பார்க்கலாமா என்றால், என்னைப் பொறுத்தளவில் ஒரு மனிதனுக்கு எல்லா கிரகங்களும் நல்ல கிரகங்களே. எல்லா கிரகங்களும் கெட்ட கிரகங்களே என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது தாய் வயிற்றில் பிறக்கும் போது எந்தெந்த கிரகங்கள் நமக்கு நன்மையே செய்யுமோ அது சார்ந்த  கிரகம் சம்பந்தப்பட்ட எண்களை உபயோகித்துக் கொள்வது நல்லது என்பேன். எப்படி என்று சொன்னால், நான் பார்க்கிற ஜோதிட முறையில் நான்கு வர்ண அடிப்படையில் கிரகங்களை பிரிக்கின்றோம்.

அதாவது ஒன்று,மூன்று, ஏழு, பதினொன்று பாவங்களை வைசியர் என்றும், 5,9  பாவங்கள் என்பது பிராமணர் என்றும், 2,4,6 10 இவைகள் சூத்திரர் என்பதும் 8 12 சத்ரியர் என்றும் பிரித்து இருக்கின்றோம். அந்த வகையில் எந்த கிரகங்கள், எந்த இனத்தோடு சேர்ந்து இருக்கின்றதோ, அதுபோல இருக்கும் கிரகங்கள் சார்ந்த எண்களை உபயோகிக்க நல்ல பலனைத்தரும்.