எண் கணித பலன்கள் ஏழு Numerology 7 | Life Path Number 7

எண்கணித ஏழு எண்களுக்கான பலன்

ஏழு என்கிற எண் ஒரு ஞான மார்க்கம் சார்ந்தது  ஆகும். ஏனெனில்  ஜோதிட சாஸ்திரத்திலும், எண் கணித நியூமராலஜி சாஸ்திரத்திலும், 7 என்கிற எண் கேது பகவான் சம்மந்தப்பட்ட எண்ணாகும். ஆக நல்ல எண்கள் வகையில்  ஏழு சம்பந்தப்பட்ட எண் என்பது ஒரு ஐந்து எண்கள் மட்டுமே பயன்படும். அந்த வகையில் ஒரு பெயர் வைப்பது மற்றும், வாகனத்தின் எண் எடுப்பது மற்றும், ஒரு நிறுவனத்தின் பெயர் வைப்பது போன்ற அமைப்புகளுக்கு கீழ்கண்ட எண்களைத் தாராளமாக உபயோகித்துக்கொள்ளலாம். 16, 52, 79, 88, 97 இதை எடுக்கும் பொழுது கூடவே ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி பார்த்துக்கொள்வது நல்லது. அதேபோல இந்த கேது சம்பந்தப்பட்ட கீழே குறிப்பிடக்கூடிய எண்களை எக்காரணம் கொண்டும் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். அதாவது 7, 25, 34, 43, 61, 70 இந்த எண்கள் வாகனத்தின் எண்ணாக  பெயர் எண்ணாக, மொத்த எண்ணிக்கையில் வருவது தவறு. Numerology 7 | Life Path Number 7