எண்கணிதம் நான்கு

எண்கணிதம் நான்கு எண்னின் பலன் தெரிந்து கொள்வோம்.

மிகப்பெரிய அளவில் ஒரு பிரம்மாண்டத்தை கொடுக்கக்கூடிய ஒரு எண் என்று சொன்னால் அது நான்காகும். ஏனென்றால் 4 என்கிற எண்ணின் காரகத்தை ராகு என்கிற கிரகம் தனது எண்ணாக பாவித்துக் கொள்கிறது. அந்த வகையில் நான்கு சம்பந்தப்பட்ட எண்னை உபயோகிக்கும்போது மிகவும் சர்வ ஜாக்கிரதையாக உபயோகப்படுத்த வேண்டும். ஒரு மனிதனை மிகப்பெரிய அளவில் வாழ வைக்கும் அல்லது மிகப்பெரிய அளவில் வீழவும் வைக்கும். அந்தவகையில் 4 என்கிற எண்ணிற்கு சிறப்பு எண்கள் எது என்று பார்க்கும் பொழுது 4 மற்றும் 22, 85 எண்கள் சிறப்பான எண்கள் ஆகும். அதேபோல எதிர்மறை பலன்களை கொடுக்கக்கூடிய எண்கள்தான் நான்கு சம்பந்தப்பட்ட அதிகம் இருக்கின்றன. ஆகவே 13, 31 , 40, 49, 58, 67, 76, 94  இது சம்பந்தப்பட்ட எண்களில் ஒருவர் பெயர் வைப்பதும், ஒருவர் வண்டியின் எண்ணாக உபயோகிப்பதும், ஒரு தொழிற்சாலையின் பெயராக கூட்டுத் தொகையாக இந்த எண் வருவதும் தவறாக பார்க்கப்படுகிறது.  நான்கு என்கிற எண்களில் மூன்றே மூன்று எண்கள் மட்டும் நல்ல பலன்களை கொடுக்கும். கூடவே அந்த எண்ணிற்கு ஹூப்ரு பிரமிடு நியூமராலஜி பார்த்துக்கொள்வது நல்லது.