உங்கள் வீடு குபேர மனையாக வேண்டுமா?

best vastu house
best vastu house

குபேர மனை

 

திறந்த மனதோடு ஒரு விசயத்தை உங்களுக்கு இந்தக் கட்டுரையில் சொல்கின்றேன்.வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு விஞ்ஞான கலை ஆகும்.  இந்த இடத்தில் என்றும் நிலையாக உள்ள விசயமே விஞ்ஞானம்.அந்நிய  படைகள் காரணமாக பல அறிதான கலைகள் நம் நாட்டில் அழிந்து விட்டது. அதில் நமது வாஸ்து சாஸ்திரமும் ஒன்றாகும். இந்த இடத்தில் எங்களை போல வாஸ்து நிபுணர்களுக்கு  இறைசக்தி  துணைபுரிந்து நமது அறிவு வேலை செய்து இப்போது இருக்கின்ற சாஸ்திரத்தை    வைத்தே தெளிவாக  சொல்லக்கூடிய பாக்கியத்தை தொண்டை நாட்டில் உள்ள தாமரைச்செல்வி அம்மை எனக்கு துணை புரிகின்றாள் என்றுதான் சொல்லுவேன்.

 ஒருவர் பணக்காரர் ஆகின்றார் என்றால் ஒன்று மனை சரியாக குபேர மனையாக இருக்க வேண்டும். அல்லது அவரின் பிறப்பு கர்மா பணக்காரர் ஆக வேண்டும் என்ற விதி இருக்க வேண்டும்.இந்தஇரண்டவது வழி என்பதுஎலோருக்கும் அமையாது.முதல்வழி நம்மால் முடியும். ஆக நீங்கள் பணக்காரர் ஆக முதல் வழி என்பது நாம் உறுவாக்கும் வீடு ஆகும்.

 அந்த வகையில்  அந்த வீடு என்பது ஒரு மனை சதுரமாக அல்லது செவ்வக அமைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு திசைகள் திறந்து இருக்க வேண்டும். வாயில் உச்சத்தில் இருக்க வேண்டும். படி பாதிக்கப்பட்ட அமைப்பாக இருக்க கூடாது. வடக்கு கிழக்கு அதிக இடங்கள் வேண்டும். ஆக இவையெல்லாம் இருந்து கூடவே பாரம்பரிய உணவுகளை இன்று நாம் எப்படி தேடிப் போகின்றோமோ அதுபோல பழந்தமிழர் மனையடி சாஸ்திர கலையான ஆயாதி கணித அடிப்படையில் வீடு இருக்கும் போது நீங்கள் குபேர மனையோடு உள்ள கோடிஸ்வரர்.

best vastu house
best vastu house