உங்கள் ராசிக்கல் எது?/Lucky Stone by Rashi

என்னைப் பொறுத்த அளவில் ராசிக்கற்கள் அணிவது என்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதனை எப்படி நீங்கள் அணிகிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் ராசி அணிகின்றிர்களா? லக்னத்துக்கு அனிகின்றீர்களா? அல்லது நடப்பு திசா புத்திக்காக அணிகிறிர்களா  என்பதனை எல்லாம் விட உங்கள் ஜாதகத்தில், எந்த கிரகம் மிக வலிமையாக இருக்கிறது, அதாவது உறவு நிலைக்கு தேவை, அல்லது உடல்நிலைக்கு தேவை என்றால் அதற்கு ஒரு கல் அணிவது வேண்டும். அல்லது பணம் என்ற நிகழ்வுக்கு ஒரு தேவை என்றால் அதற்கு ஒரு வகை கல். இப்படி நமது ஜாதகத்தில் பிரித்து பார்த்து தான் ராசி கற்களை அணிய வேண்டும். அதுதான் நல்ல பலன்களை கொடுக்கும். மொத்தமாக எந்த கோரிக்கைகளுக்கு இல்லாது, பொதுவாக அணிந்தால் ராசிக்கற்கள் அணிவது என்பது பெரிய பலன்களைக் கொடுக்காது என்பது என்னுடைய ஆராய்ச்சி சார்ந்த விஷயம்.ஆக முடிவு செய்வது வேண்டியது நீங்கள். எப்படி அணியலாம் என்கிற சூட்சமத்தை நிச்சயமாக உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்து, என்னால் உங்களுக்கு ராசிகற்களை வழங்கமுடியும். அது உங்க வாழ்க்கையில் பணம் சார்ந்த நிகழ்வுகளில், உறவு சார்ந்த நிகழ்வுகளில், உடல்நிலை சார்ந்த நிகழ்வுகளில் நிச்சயம் பாதுகாப்பளிக்கும்.