ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

வீட்டில் வாஸ்து குறைபாடு
வீட்டில் வாஸ்து குறைபாடு

வீட்டில் வாஸ்து குறைபாடு

திருமண நிகழ்வுகளில் திருமணம் நெருங்கி வந்து திருமணம் நிச்சயிக்கப்படும் நேரத்தில் நின்று விடுதல். அதாவது திருமணம் தள்ளிப்போதல் அல்லது ஒரு வீட்டின் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்வது.அல்லது எனக்கு திருமணம் வேண்டாம் நான் இறைவனின் அடியாராக இறைசேவை செய்ய செல்கின்றேன் என்று சொல்வது.

அடிக்கடி கருச்சிதைவு மற்றும் கருகலைவு ஆவது,அல்லது உனக்கு குழந்தை நான் எனக்கு குழந்தை நீ என்று இருக்கும் மனநிலை ஏற்படுவது,இப்படி பலவிதமான பிரச்சினை காரணமாக,குழந்தை பேறின்மை.
தொழிலில்  மந்தம் அல்லது நஷ்டம்.அல்லது அசல் வியாபாரம் மற்றும் அடுத்தவர்களுக்கு தொழிலை விட்டு கொடுத்து விட்டு வருதல்.அல்லது அடுத்தவர்கள் இவர்களை நல்ல தொழிலில் இருந்தோ அல்லது பத்து வருடங்களுக்கு மேலாக உழைத்து உயர்திய நிறுவனத்தை விட்டு வெளியேற்றுவது,

குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றமின்மை. தனது வாரிசு தனது தொழிலை பார்க்காமல் இருப்பது,
கர்ப்பப்பை, ஆஸ்துமா, ஹீமோக்ளோபின்.   மற்றும் கால் சார்ந்த நோய்கள் அதாவது எந்த காரணமும் இல்லாமல் கால்கள் வீங்கி விடுதல் அதனால் கால் வலிகள் ஏற்படுதல்.குறிப்பாக அதாவது பெண்களின்  உடல்நிலை பாதிப்பு .
ஆண்களின் உடல்நிலை பாதிப்பு குறிப்பாக பக்கவாதம், கல்லீரல், விபத்துகள், கண்பார்வை.மற்றும் இதயநோய்கள் காலில்ரத்தம் கட்டியாகி நரம்பு முடிச்சு ஏற்ப்படுதல்,
வேலையில் பதவி உயர்வு கிடைக்காமல் இருத்தல். அதாவது ஒரே வேலையை இருபது வருடங்களுக்கு மேலாக பார்ப்பது.அல்லது இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒருவேலையில் இல்லாமல் அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவது.
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் கடனோடு வாழ்க்கை நடத்துதல் இந்த மாதிரியான நிகழ்வு பெரும்பாலும்  நடுத்தர அரசு ஊழியர்களுக்கு நடக்கும்.
மணமுறிவு, கணவன் மனைவி பிரிந்து இருப்பது,வழக்குகள், தீ விபத்துகள்.தற்கொலை முயற்சியில் குடும்ப நபர்கள் ஈடுபட முயல்வது.

 

Vastu deficiency at home
Vastu deficiency at home

வீட்டில் உள்ள பெண்கள் தவறான தொடர்பு, அல்லது வீட்டில் உள்ள ஆண்கள் தவறான தொடர்பு,அல்லது வீட்டில் உள்ள கணவன் மற்றும் மனைவி இருவரும் தவறான தொடர்புகள் இருப்பது அதனை தெரிந்தே செய்வது.மற்றும் சமுகத்தில் தவறான தொழில்களான,போதைப்பொருள் விற்பது, கள்ளச்சாராயம் விற்பது,விபச்சாரத்தில் ஈடுபடுவது,அதனை நடத்துவது,பணத்திற்காக தவறான காரியங்களில் ஈடுபடுவது,லஞ்சம் வாங்குவதும், லஞ்சம் வாங்க தூண்டுவதும் வாஸ்து குறைகள் இருந்தால் மட்டுமே நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)