இரண்டு இடங்களுக்கு இடையில் கிணறு

vastu for well
vastu for well

வாஸ்துவும் கிணறுகளும்

சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு கட்டிய வீடுகளில் ஒரு இடத்தை வாங்கி இரண்டாக பிரித்து இடத்தின் மத்தியில் கிணறுகளை அமைக்கின்றனர்.அப்படி அமைப்பது என்பது ஒருவருக்கு நன்மையும் மற்றவர் ஒருவருக்கு தீமையையும் அளிக்கும்.வாஸ்து படி நீங்கள் வீடு கட்டினாலும், உங்கள் வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு இருப்பது தவறு
வடக்கு பார்த்த ஒரு மனை இருக்கிறது என்றாலே இதனை இரண்டாக பிரிக்கும் போது, ஒரு இல்லத்திற்கு வடகிழக்கிலும், மற்றொரு இல்லத்திற்கு வடமேற்கில் கிணறு வந்து விடும். இந்த கிணறு ஒருவருக்கு நன்மையை செய்தாலும் மற்றவரான கிழக்கு புறத்தில் இருக்கும் மக்களுக்கு தீமையை தருகின்ன அமைப்பாகி விடும்.
அதேபோல கிழக்கு பார்த்த மனைகளில் கிழக்கு மத்தியில் இருவரும் சேர்ந்து கிணறு அமைக்கும் போது, தெற்கு புறத்தினில் இருப்பவர்கு நன்மை அளிக்கின்ற அமைப்பில் இருக்கும். அதுவே வடக்கு புற வீடுகளுக்கு தவறான அமைப்பில் கிணறு வந்து விடும்.இப்படி உளாள ஒரிரு வீடுகளை எனது வாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன். அங்கு அவர்களின் நேரத்தின் அடிப்படையில் பெண்குழந்தைகளே அதிகமாக இருக்கிறது. அதுவே அங்கு ஆண்குழந்தை பிறந்தால் அங்கு அது நிலைத்து நிற்கும் சக்தி குறைவாக இருக்கும். அவர்களின் முன்னோர்கள் செய்த புன்னியம அந்த வீட்டில் உள்ள ஒரிரு ஆண்களை பல பெண்கள் ஒன்றாக இணைந்து காக்கின்றனர்.
ஒரு கிணறு அமைக்கின்றோம் என்றால் தனித்தனி சுற்றுச்சுர்களை எழுப்பி தனித்தனியாக அமைப்பது தான் சாலச்சிறந்தது. இல்லையெனில் இரண்டு இடங்களாக பிரிக்காமல் தரைத்தளம் ஒருவருக்கும்,மேல்தளம் ஒருவருமாக உபயோகப்படுத்துவது மிகவும் வாஸ்து அமைப்பில் நல்லது.

 

vastu for well
vastu for well

நான் வாஸ்து பார்த்த பல இடங்களில் கிணறை மூடச்சொல்லி தெற்கு புறத்தில் உள்ளவர்களுக்கு நல்லது என்பதால், அவர்கள் கிணறை மூட சம்மதிக்காது சண்டை ஏற்பட்ட இல்லங்களும் எனது வாஸ்து பயணத்தில் உண்டு. இப்படிப்பட்ட அமைப்பு எங்கள் கொங்கு நாட்டில் தான் அதிகமாகும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)