தமிழக நிலப்பரப்பும் இன்றைய நவீன வாஸ்துவும்,

manaiyadi shastra vastu in tamil
manaiyadi shastra vastu in tamil

பாரம்பரிய வாஸ்து

 

தமிழகத்தின் அமைவிடம் என்பது பூமத்திய ரேகையின் வடக்கு தெற்கு நிலையில்23″27′ அயனக்கோட்டு பகுதியில் அமைந்துள்ளது.அவ்வாறு அமைந்துள்ள பகுதிகளை புவியியல் ரீதியாக ஆங்கிலத்தில்”tropical” என்று அழைக்கின்றனர்.

இந்த மாதிரியான இடங்களில் பிறபகுதிகளின் தட்பவெப்ப நிலையில் மாறுபாடு இருக்கும். அதாவது அதிக வெப்பமான சூல்நிலை,வளமை குறைந்த அதிக நிலப்பரப்புகள்,நீர்நிலைகளின் குறைந்த தண்ணீர், இப்படிப்பட்ட அமைப்புகளே இருக்கும். இதுவே tropical நிலப்பரப்பின் குணங்கள் ஆகும். இவ்வாறு தெற்கு பகுதிகளில் அமையும் நாடுகளை tropical countries என்று அழைப்பார்கள் புவியியல் அறிஞர்கள்.  வடக்கு பகுதிகளில் ஈராக்,ஈரான், எகிப்து, ராஜஸ்தான், பஞ்சாப், சீனநாட்டில் வடசீனம்,போன்றற பகுதிகள் நகரிய வளர்சி பெற்ற வீடுகளில் வாழ்ந்தார்கள்.

ஆனால் டிராப்பிகள் பகுதிகளில் வீடுகள் வாஸ்து சாஸ்திரத்தின் வட இந்திய பகுதிகளில் இருந்து வந்ததை அப்படியே எடுத்துக்கொண்டு நமது தமிழக இயற்கை அமைப்பினை ஒதுக்கி வைத்து வீடு கட்டுவது என்பதும் தவறு.

தமிழக மக்களின் வாழ்விடங்களாகிய வீடுகள் அம்மக்களுக்கு மிக நெருங்கிய உறவினை பெற்று இருந்தாலும்,அவர்களின் தினசரி வாழ்வு வீட்டுக்கு வெளியே அதிக நேரம் செலவிடப்படுகிறது.

அந்தவகையில் தமிழ் நாட்டில் வாழ்ந்த வேளாண்குடி சார்ந்த மக்கள் மிகுதியான மழை வெயில் கஷ்டங்களில் இருந்து தப்பிக்கும் வழிமுறையாகிய தங்குவதற்கு இடமாக பயன்படுத்தினர்.

அடுத்து ஓய்வு பெற தங்கும் இடங்களாக பயன்படுத்தினர்.

உடைமைகளை பாதுகாக்க பொருள்களை சேமித்து வைக்கும் இடங்களாக பயன்படுத்தினர்.

அந்தவகையில் தான் தனது போக்குவரத்து காரணங்களுக்கும் உழவு தொழிலுக்கும்,துணையாக இருந்த மாடுகளையும்,மாட்டு வண்டிகளையும்,குதிரை வண்டிகள் மற்றும் குதிரைகளையும் எந்த இடத்திலும் வீட்டின் உள்பகுதிகளில் கொண்டு வரவும் இல்லை அதற்கான அமைப்புகளை ஏற்படுத்தவும் இல்லை.

அவர்கள் கட்டிய கட்டிட அமைப்பில் இன்றைய நவீன வாஸ்து விதிகளில் குறைகள் இருக்கலாம்.ஆயாதி பொருத்தங்கள் பார்க்காமல் எந்த வீட்டையும் அமைக்க வில்லை.வட இந்தியாவில் இருந்து அன்று அவர்களின் அறிவுக்கு எட்டாமல் போனதே இன்றைய நவீன வாஸ்துவை பின்பற்றாததற்கு காரணம்.ஆனால் நமது தமிழர்களின் கட்டிடகலையின் மரபான ஆயாதி பொருத்தம் பார்க்காமல் ஒரு வீடு அமைப்பது என்பது கல்தோன்றா மண்தோன்றா காலத்தே வாழ்ந்த நமது மூத்தகுடிகளை புறக்கணித்து வாழ்தல் போன்றது ஆகும்.ஆக நீங்கள் வீடு கட்டுகின்றீர்கள் என்று சொன்னால்,

இன்று  எப்படி நமது முன்னோர் பாரம்பரியமாக உபயோகித்த செக்கு நல்லெண்ணெய் வேண்டும், செக்கில் ஆட்டிய கடலெண்ணெய் வேண்டும் என்று தேடிப்போய் வாங்குகின்றீர்களோ அதுபோல இன்றைய வடநாட்டில் இருந்து வந்த வாஸ்துவையும் விடாமல்,நமது முன்னோர் கட்டிட கலையை மருந்துக்குகூட பார்க்காமல்  வெறும் நான்கு மூலைகளை நான்கு திசைகளை மட்டுமே சொல்லுகின்ற வெறும் வாஸ்துவை மட்டுமே பார்த்து வீடு கட்ட வேண்டாம்.நமது முன்னோர் கட்டி வாழ்ந்த கட்டிடகலையின் சாஸ்திரமான காலத்திற்கு ஒவ்வாது என்று இன்றைய  நவீன வாஸ்து நிபுணர்கள் ஒதுக்கிய     மனையடிசாஸ்திர மற்றும்,ஆயாதி சாஸ்திர  கலையையும் ஒதுக்கி விட்டு வீடுகட்டி வெறும் 60வயதில் மரணத்தை சந்தித்து வாழும் வாழ்க்கை வேண்டாம்.

 

ayadi calculations in vastu
ayadi calculations in vastu

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)