ஆவிகள் வாழ்கின்ற இடங்களில் வீடு கட்டலாமா?

Haunted
Haunted

ஆவிகள் தொந்தரவு

ஆவிகள் குடி  இருக்கின்ற இடங்களில் வீடு கட்டி வாழும் போது சிறு தொந்தரவுகளும் பெரிய தொந்தரவுகளும் ஏற்படுவதுண்டு.ஒரு வீடு கட்டுகிறார்கள் என்றால் அந்த வீட்டை ஒரு குடும்பம் வாழ்வதற்கு பயன்படுத்தியே ஆக வேண்டும். அவருடைய வாழ்வில் எதாவது பெரிய தொந்தரவு இருந்து அந்த கஷ்டத்தில் அந்த வீடு விற்கப்பட்டாலும்,அதனை வாங்குபவருக்கும் அங்குள்ள ஆவிகள் தொந்தரவு கொடுக்கும்.இதனை ஒரு ஆவி ஓட்டம் தெரிந்த வாஸ்து நிபுணர் மட்டுமே கண்டரிய முடியும்.இதனை இந்த பதிவை படிக்கிற மக்கள் இதனை நம்பாது  கூட இருக்கலாம் ஆனால் இது 100 சதவீதம் உண்மை.நமதுதேவார பதிகங்களில் அருணகிரிநாதர் திருப்புகல் பாடல்களில் பேய் மற்றும் ஆவிகள் பற்றிய செய்திகள் உள்ளன.

கட்டிய வீடுகள் சிலது நல்ல பலனையும் கொடுக்கும். சிலவகை வீடுகள் தீய பலனையும் கொடுக்கும். இது எதனால் ஏற்படுகிறது?அல்லது இது முழுக்க முழுக்க வீடு சார்ந்த கோளாறு தானா?அல்லது இந்த வீட்டின் வழியாகதான் வளமையான வாழ்வு வந்ததா?அல்லது இந்த வீட்டின் வழியாகதான் வளமை குன்றிவிட்டதா?அல்லது இது மனம் சார்ந்த கோளாறா?ஆக இப்படி பல வகைகளிலும் சிந்தனை செய்கின்றனர்.

ஒரு வீட்டில் கஷ்டம் வருவதற்கு காரணம் வாஸ்து சாஸ்திர பிழைகளும்,மனையடி ஆயாதி கணித பிழைகளும் இருக்கின்ற பட்சத்தில் கஷ்டங்களை கட்டாயமாக கொடுக்கும்.இந்த சாஸ்திர பலன்களை பொறுத்தவரை தண்ணீர் இருக்கும் இடத்தில் தான் குளிர்ச்சி இருக்கும். இயற்கையான மரங்கள் இல்லாத இடங்களில் வீட்டின் கூரையை கடந்து வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.

ஆவிகளுடன் பேசும் பயிற்சி
ஆவிகளுடன் பேசும் பயிற்சி

அதுபோல வெளிக்காற்று எந்த அளவிற்கு வெளியே இருந்து உள்ளே வரவேண்டும். அதுபோல வந்தகாற்று எந்த அளவில் உள்ளே இருக்க வேண்டும். என்பது மிகமிக முக்கியம். ஒரு வீட்டினை வாஸ்து அமைப்பில் மாற்றம் செய்தும் கஷ்டம் தீராத பிரச்சினை இருக்கிறது என்றால் அது முழுக்க ஆவிகளின் சேட்டைகள் தானே தவிர வேறு காரணங்கள் கிடையாது.

ஆவிகள் தான் ஒரு இல்லத்தில் இருந்து கொண்டு தொந்தரவு செய்கிறது என்பதனை என்னைப் போன்ற  சூட்சும வாஸ்து நிபுணர்கள் கண்களுக்கு தெரியும்.அதைவிட வேறு பிரச்சனைகளும் அங்கு ஆவிகளின் சேட்டை எண்பதனை கண்டு பிடிக்க முடியும்.

அப்படி ஆவி தொந்தரவு இருக்கிறது என்றால் அந்த வீட்டில் கெட்ட கனவுகள் வரும்.இரவு நேரத்தில் யாரோ மதில் பின்புறம் பேசுவது போல  யாரோ வீட்டின் பின்புறத்தில் நடமாட்டம் இருப்பது போன்ற எண்ணங்களை கொடுக்கும். அல்லது அந்த வீட்டின் நபர் நன்றாக எந்தவித கெட்டபழக்கம் இல்லாமல் இருந்தவர் திடிரென்று போதை பழக்கத்திற்கு அடிமையாவது,தவறான பெண் தொடர்புகள் ஏற்படுவது,வியாபாரம் நஷ்டம் அடைவது,வாகன விபத்துகள் ஏற்படுவது, அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் நன்றாக படிக்க மாட்டார்கள் பெற்றோர் பேச்சினையும் கேட்க மாட்டார்கள். அதிகம் பாதிக்கப்படுவது ரியல் எஸ்டேட் செய்யும் மக்களும் அந்த தொழிலுக்கு துணையாக இருக்கும் தரகர்களும் தான்.

ஆக ஆவிகள் வீட்டில் நடமாடுவது உண்மையா என்பதனை எளிதாக கண்டுபிடிக்க முடியும். எழுமிச்சை கனியை வீட்டில் வெளிபுற நான்கு உள்மூலைகளிலும் வீட்டில் உள் மூலைகளும் வைத்து ஒரு வாரம் கழித்து பார்த்தால் அதில் எதாவது ஒரு கனியாவது அழுகி போயிருக்கும். அப்படி இருந்தால் அந்த வீட்டில் ஆவி நடமாட்டம் உண்டு.

இதனை நீங்கள் உண்மையாக  தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அமாவசை இரவு 12 மணிக்கு மேல் ஒரு அகல் விளக்கு ஏற்றி வடமேற்கு பகுதில் உள்ள அறையில் எந்த மின்சார விளக்குகளை அந்த அறையில் போடாமல் பார்க்கும் போது ஒரு கரிய நிழல் உருவம் தெரியும்.ஆனால்பயப்பட வேண்டியது இல்லை.அதிக ஒளி ஏற்படுத்தினால் மனித கண்களுக்கு தெரியாது.தேவகணத்தில் பிறந்த நபர்களின் கண்களுக்கு அது அங்கேயே இருந்தாலும் தென்படாது. ஆவிகள் எல்லோரது கண்களுக்கும் தெரியாது. எல்லோரும் ஆவிகளை உணர முடியாது. சிலருடைய கண்களுக்கு மட்டும்தான் ஆவிகள் தெரியும். சிலரால் மட்டுமே ஆவிகளை உணர முடியும். ஆவிகள் யாருடைய கண்களுக்குத் தெரியும். ஆவிகளை உணரக்கூடியவர்கள் யார் என்பதைக் கீழே பார்ப்போம்.

accident,ஆவிகளுடன் பேசும் பயிற்சி
accident,ஆவிகளுடன் பேசும் பயிற்சி

 தேவ கணம்: அஸ்வினி, மிருக சீரிஷம், பூசம், புனர் பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம் மற்றும் ரேவதி.மென்மையான இயல்பு, தெய்வீக எண்ணங்கள், தெய்வீக தொடர்புகள், பக்தி, பிறரை நேசிக்கும் தன்மை, அநீதிகளை எதிர்த்தல், இனியவாக்கு, மற்றவருக்கு அருளும் தன்மை.

மனுஷ கணம்: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி.கடுஞ்சொல், தீமை செய்தல், அநாகரிக செயல்கள், தெய்வ பக்தி குறைவு, நிந்தனை செய்தல், பிறரை குரூரமாக தண்டித்தல் போன்ற அசுர குணங்கள்.ராக்ஷஸ கணத்தில் பிறந்தவர்களுக்கு, ஆவிகள் சாத்வீகமான மனுஷ வடிவங்களில் உணர முடியும். ஆனால் மனுஷ கணத்தினரைப் போல பயம் பீதி போன்ற உணர்வுகள் இவர்கள் அடைவதில்லை. மாறாக அதன் மீது ஒரு ஈர்ப்பு சக்தியையும் பெறுகின்றனர்.தேவ கணம் மற்றும் அசுர கணம் இரண்டும் பொருந்திய குணம். அவ்வப்போது மாறுபடும் குணம். மற்றும் தன்மைகள்.
மேலே கூறப்பட்டவை, நட்சத்திரங்கள் அடிப்படையில் இருக்கும் குண இயல்புகள் ஆகும். சில நேரங்களில் ஒருவர் பிறந்த லக்னத்தின் இயல் புகளின் அடிப்படையில், இயல்புகள், குணங்கள் கலந்து நிற்கும்.
பொதுவாக இந்த ஆவிகள், மனுஷ கணம் மற்றும் ராக்ஷஸ கணங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கண்களுக்கோ அல்லது உணர்வுகளுக்கோ புலனாகும். அவ்வாறு ஆவிகள் புலனா கும்போது, இந்த ஆவிகளின் உருவம் இவ்விரு பிரிவினருக்கும் வெவ்வேறாகத் தோற்றம் அளிக்கும்.
மனுஷ கணத்தில் பிறந்தவர்களுக்கு ஆவிகள்-பேய், ராக்ஷதர்கள் போன்ற அருவருப்பான மற்றும் கோரமான வடி வங்களில் உணர முடியும். இவ்வாறு உணரும்போது அவர்கள் பயம், பீதி போன்ற உணர்வுகளை அடைவார்கள். சில நேரங்களில் அவர்களின் மனநிலை கூட பாதிக்கப்படலாம்.

ராக்ஷஸ கணம்: கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம் மற்றும் சதயம்.  அந்த உருவம் எதுவும் உங்களை ஒன்றும் செய்யாது.ஆனால் சில மறைமுக சூட்சும விசயங்களை அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு கொடுக்கும்.ராக்ஷஸ கணத்தில் பிறந்தவர்களுக்கு, ஆவிகள் சாத்வீகமான மனுஷ வடிவங்களில் உணர முடியும். ஆனால் மனுஷ கணத்தினரைப் போல பயம், பீதி போன்ற உணர்வுகள் இவர்கள் அடைவதில்லை. மாறாக அதன் மீது ஒரு ஈர்ப்பு சக்தியையும் பெறுகின்றனர்.

பொதுவில் மனோகாரகன் சந்திரன் வலுவிழந்து உள்ள மனுஷ கண ஜாதகர் ஆவிகளுடன் எதிர்பாராத தொடர்பு ஏற்பட் டால்,அவர்களது மனோநிலை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது

இதனை விரட்ட ஒரே வழி வாஸ்து அமைப்பில் வடமேற்கு தென்மேற்கு சரியாக இருக்க வேண்டும்.ஆயாதி கணிதத்தில் யோனி பொருத்தம் சரியாக இருக்கும் போது பேய் மற்றும் பிசாசு ஆவிகளின் சேட்டைகள் அந்த வீட்டில் இருக்காது.எதற்கும் கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஆலய தரிசனமும் ஆவிகளின் சேட்டைகள் விலக வழிவகுக்கும்.

ஆவிகளை பார்ப்பது எப்படி
ஆவிகளை பார்ப்பது எப்படி

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)