அலுவலகத்தில் வாஸ்து

அலுவலகத்தில் வாஸ்து   என்று பார்க்கும் பொழுது, எந்த அலுவலகமாக இருந்தாலும் கண்டிப்பாக வடக்கு திசை வாசல் வேண்டும். ஆனால் வாஸ்துவின் விதிகளின்படி வடக்கும் கிழக்கும் ஜன்னல் என்பது வேண்டும். ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் அலுவலகம் இருக்கிறது என்று சொன்னால், அந்த அலுவலகத்தில் வடக்கிலும், கிழக்கிலும் கண்டிப்பாக காலியிடம் என்பது வேண்டும். அது இல்லாது ஒரு அலுவலகம் இருக்கிறதென்றால் வாஸ்து இல்லை என்று அர்த்தம்.

சதுரம் அல்லது செவ்வகம் என்பது அலுவலகத்திற்கு வேண்டும். அலுவலகத்தில் சமையல் சார்ந்த உபயோகம் இருக்கிறது என்று சொன்னால் வடமேற்கு, தென்கிழக்கு மட்டுமே வர வேண்டும் . அலுவலகத்தின் சி ஏ ஓ அல்லது, எம்டி அல்லது சேர்மன் என்று சொல்லக்கூடிய முதன்மை மக்களுக்கு தென்மேற்கு பகுதியில் அறைகளை ஒதுக்க வேண்டும். ஒரு அலுவலகத்தில் பைல் மற்றும் பீரோ, பணம் சார்ந்த பொருள்கள் தென் மேற்குப் பகுதிக்கு வர வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்ற பகுதிக்கு வரக்கூடாது. எடை அதிகமாக இருக்கிற பொருள் வைக்க வேண்டும் என்று சொன்னால், நேரடியாக விற்பனை சார்ந்த விஷயம் அந்த இடத்தில் இருக்கிறது என்றால் மொத்த பொருள்களை தெற்கு பகுதியில் அடுக்கி வைக்க வேண்டும். இந்த விதிகளுக்கு உட்பட்டு ஒரு அலுவலகம் இருக்க வேண்டும். இந்த விதி சாஃப்ட்வேர் அலுவலகம், ஐ டி சார்ந்த அலுவலகம், கார்ப்பரேட் அலுவலகம், அதேபோல ஒரு விற்பனை சார்ந்த ஒரு அலுவலகம், புரோக்கரேஜ் என்று சொல்லக்கூடிய  வணிக விற்பனை பிரதிநிதி அலுவலகம், ஷேர் மார்க்கெட் சார்ந்த அலுவலகம் எதுவாக இருந்தாலும் இந்த விதிகள் பொருந்தும்.