அற்புதமான வாழ்க்கையை கொடுக்கும் வீடு எதிர்மறை பலன் காரணம் என்ன?

சென்னை வாஸ்து
சென்னை வாஸ்து

அற்புதமான வாழ்விற்கு வாஸ்து

இல்லறத்து வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வீடுதான் சொர்க்கம். ஆனால் அப்படிப்பட்ட வீடு சந்தோசமான வாழ்வை கொடுக்க வேண்டும்.ஆனால் எதிர்மறையாக,செயல்பட்டால் இதற்கு காரணம் என்ன என்பதனை நீங்கள் தெரிந்து கொண்டு வாழ்வது நல்லது.
சிறிய வீடாக இருந்தாலும் சரி அரண்மனை  போல வீடாக இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் வாஸ்து மனையடி ஆயாதி பொருத்தம்  முக்கியம்.அப்படி ஆயாதியும்,வாஸ்துவும் இல்லாமல் போகும்போது, எதிர்மறையான  விஷயங்கள்  ஒரு இல்லத்தில் நடக்க ஆரம்பிக்கும். 
மனிதர்கள் படைத்த வசதி வாய்ப்புகளை இயற்கை சக்திகளோடு ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல் வாஸ்து சாஸ்திரம் ஆகும். ஐம்புலன்களால் அறியக்கூடியதும் அறிய முடியாததுமான இயற்கை சக்திகளை, மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமைத்துக் கொள்வதே, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைக் குறிக்கோள்.
நம் உடலே பஞ்சபூதங்களால் உறுவாக்கப்பட்டது ஆகும். கண் இருக்க வேண்டிய இடத்தில் காதும், காது இருக்க வேண்டிய இடத்தில் மூக்கும் இருந்தால் நம்மை யாராவது மனிதர் என்று சொல்லமுடியுமா? அதேபோல்தான் வீட்டில் சரியாக வாஸ்து இல்லாவிடில் சிரிப்பும், சந்தோஷமும் காணாமல் போய் எப்போதும் அந்த வீட்டில் யார் இருக்கின்றார்கள் என்றே தெரியாத அமைப்பாக,யார் எந்த இருக்கின்றனர் என்ற தெரியாத அளவில் இருப்பார்கள்.
வாஸ்து என்றால், பொருட்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடங்கள் என்பது பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் பஞ்சபூத சக்திகளின் ஆசிகள் பெற்று வளமோடு வாழமுடியும். இல்லையென்றால், பணக்கஷ்டம், மனகஷ்டம், உறவுகள் பிரிந்து செல்வது. கடன் ஏற்பட்டு அவமானப்படுவது என்று பல வகையில் துன்பத்தைதான் சந்திக்க வேண்டும்.

 

சென்னை வாஸ்து
சென்னை வாஸ்து

யார் ஒருவர் வாஸ்து சாஸ்திரத்தின் படியும் ஒரு வீட்டில் ஆயாதி கணித பலன் பொறுந்தி வரும் அமைப்பில் ஒரு இல்லத்தை அமைக்கும் போது  அவர்கள் திரண்ட செல்வத்தையும், குடும்ப வாரிசுகளையும், சொத்துக்களையும், இன்பங்களையும் தவறாமல் அடைவார்கள். ஆக ஒரு சரியான விகிதாசாரத்திலான பஞ்சபூதங்களின் சேர்க்கையே வாஸ்து ஆகும்.
இதில் நம்மால் செயல்படுத்த சாத்தியமான நிலம், நெருப்பு, நீர் ஆகியவற்றையாவது முறைப்படி சேர்த்து, வாஸ்து முறைப்படி கட்டடங்களை அமைத்துப் பலன் காண வேண்டும். சமையலறை அமைய வேண்டிய இடத்தில் குளியல்அறை அமைக்க
இதேபோல் படுக்கை அறை அமைய வேண்டிய இடத்தில் குளியலறை அமைந்தால் எப்படி இருக்கும். செல்வம் கொழிக்க வேண்டிய இடத்தில் நகைகள், பணம் இருக்கும் பீரோவை வைக்கும் இடத்தில் கழிவறை அமைந்தால்… இதுதான் இதுதான் பிரச்னைகளை நாமே தேடி செல்வது என்பது.
தொடர் நஷ்டம், விபத்தில் சிக்குவது, குடும்பத்தினருடன் சண்டை, அக்கம் பக்கத்தினருடன் பிரச்னை என்று கெடுபலன்களை அனுபவிக்க நேரிடும். எனவே முறையாக வாஸ்து பார்த்து வீட்டை கட்டுவோம்.ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடும் , செல்வ செழிப்போடும் வாழ்வோம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

                    

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து, 

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,

தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com

www.suriyavasthu.com

www.bannarivastu.com

E-mail:

 [email protected]

Contact:

+91 83000 21122

+91 99650 21122(whatsapp)