வெற்றியை தீர்மானிக்கும் வாஸ்து

vastu consultant in chennai
vastu consultant in chennai

பொது விஷயங்கள்

ஒரு இல்லத்தில் வெற்றியை தீர்மானிக்கும் அந்த வீட்டின் ஆண்கள் சிறப்பு பெற வேண்டுமென்றால் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு குறித்த விஷயங்கள் :

வடகிழக்கு

படுக்கை அறை, பூஜை அறை, குளியல் அறை, மரம், செடிகொடிகள், இன்வெட்டர், ஜெனரேட்டர், மின்சார சாதனங்கள், தூண் உள்ள போர்டிக்கோ, மேல்நிலைத் தண்ணீர் தொட்டி உட்புறம் மற்றும் வெளிப்புறம் படிக்கட்டுகள், கழிவுநீர் தொட்டி, பொருள் வைக்கும் அறை, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட கிணறு, திறப்புக்கள் இல்லாத வடக்கும் கிழக்கும் உள்ள சுவர்கள், வடக்கும், கிழக்கும் எல்லை வரை கட்டிடம் கட்டி இருப்பது. இந்த மாதிரியான அமைப்புகள், மற்றும் விஷயங்கள் எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக வரக்கூடாது.

தென்மேற்கு

உட்புற படிக்கட்டு அதிக திறப்புக்களுடைய ஜன்னல்கள், பெரிய கதவுகள், பெரிய பால்கனி அமைப்பு, மின்சாரம் சம்மந்தப்பட்ட விஷயங்கள், கழிவறை, குளியலறை, படுக்கை அறை இல்லாமல் வரவேற்பு அறையாக அமைத்துக் கொள்வது, இந்த மாதிரி அமைப்புக்கள் கட்டாயம் வரக்கூடாது. இந்த பகுதியை கணவன், மனைவி படுக்கும் அறையாகவும், பொருள் வைக்கும் அறையாகவும்; பணப்பெட்டி வைக்கும் அறையாகவும், தென்மேற்கு பகுதியின் மேல்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

ஒரு குடும்பத்தின் பெண் வெற்றி பெற தீர்மானிக்கும் மூலைகளான தென்கிழக்கு மற்றும் வடமேற்கு ஆகும், அங்கு அவைகளைப்பற்றி

தென்கிழக்கு

தென்கிழக்கில் படுக்கை இருக்கும் பட்சத்தில் குடும்பத்தின் தலைவர் அங்கே கண்டிப்பாக படுக்கக்கூடாது.

கழிவுநீர் தொட்டி, கழிவறை, கிணறு, போர் போன்ற அமைப்புக்கள், மேல்நிலைத் தண்ணீர்; தொட்டி, மூடப்பட்ட படிக்கட்டு அமைப்பு ஆகிய விஷயங்கள் அங்கு அமையக்கூடாது.

இந்தப் பகுதியைவிட்டு வீட்டினுள் சமையலறை அமைப்பது மிகப் பெரிய தவறு. போர்ட்டிக்கோ அமைப்பு கண்டிப்பாக வரக்கூடாது.

இங்கே என்ன வரலாம் என்று சொன்னால் சமையலறை, பூஜை அறை, வீட்டு திரையரங்கு (ர்ழஅந வுhநயவநச), இருட்டு அறைகள் (னுயசம சுழழஅ) அமைத்துக் கொள்ளலாம்.

வடமேற்கு

முக்கியமாக இங்கு வரக்கூடாத விஷயம் என்ன என்று சொன்னால் பணப்பெட்டி வைக்கும் அறை, படிக்கும் அறைகள், கிணறு, பள்ளம், போர், போர்ட்டிக்கோ அமைப்புகள், சுவருடன் கூடிய மூடப்பட்ட வெளிப்புற படிக்கட்டுகள், வீட்டின் உட்புற படிக்கட்டுகள், மேல்நிலை தண்ணீர் தொட்டி கண்டிப்பாக வரக்கூடாது.

வரவேண்டிய விஷயங்கள் என்று சொன்னால், கழிவரை அமைத்துக் கொள்ளலாம், பூஜை அறை அமைத்துக் கொள்ளலாம், இரண்டாம் பட்சமாக படுக்கை அறை அமைத்துக் கொள்ளலாம். இந்த அறையில் திருமணம் ஆகாத இளம்பெண்கள் படுத்து உறங்கலாம். கண்டிப்பாக தனியாக ஆண்கள் படுத்து உறங்குதல் தவறு.