அபிஷேக பொருள்களின் பலன்கள்

அபிஷேகம் பலன்கள்

 

 

 

 

 

 

நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாட்டினை நடத்தும் போது நாம் நினைத்த காரியங்களுக்கு இறைவன் அருள் கொடுப்பார்கள். அந்தவகையில் ஒவ்வொரு அபிசேக பொருள்களை இறைவனுக்கு அபிசேகம் மூலமாக அர்பணித்து வழிபாடு செய்வது நல்லது.
ஒவ்வொரு அபிஷேக வழிபாட்டிற்கும் சிறப்பு பலன்கள் உள்ளது. அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப அபிஷேகம் செய்து பலனை பெறலாம்.

குரல் இனிமை பெறுவதற்கு தேனால் அபிஷேகம் செய்யவேண்டும்.
நெய் அபிஷேகம் முக்தியினை தரும். நல்ல குழந்தைகளை பெற தயிர் அபிஷேகம் செய்யலாம்.
பாலாபிஷேகம் பிணிகளை நீக்கி, நீண்ட ஆயுளை வழங்கும் இறைவனுக்கு சங்குமூலமாக நாம் அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். சொர்ண அபிஷேகம் செய்தால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெருகும்.
பன்னீர்புஷ்பம் பன்னீர் மற்றும் செஞ்சந்தனம் கலந்து அபிஷேகம் செய்தால் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகி என்றும் செல்வ நிலையில் வளர்ச்சி இருக்கும்.
விபூதி அபிஷேகம் போகத்தினையும் மோட்சத்தினையும் வழங்கும்.
சந்தன தைல அபிஷேகம் இல்லத்தில் சுகத்தையும், சுபிட்சத்தினையும் வழங்கும்.
திருமஞ்சன பொடியினால் அபிஷேகம் செய்ய கடன் மற்றும் நோய் தீரும்.
கரும்பு சாறினால் அபிஷேகம் செய்தால் நோய்கள் தீரும். எலுமிச்சை சாறு அபிஷேகம் பகையை அழிக்கும்.
இன்பமான வாழ்வினை பெறுவதற்கு இளநீர் அபிஷேகம் செய்தல் வேண்டும்.
பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் உடலும் உள்ளமும் வலிமை பெறும்.